தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Jammu And Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிட காய்நகர்த்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி!

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிட காய்நகர்த்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி!

Marimuthu M HT Tamil

Jun 15, 2024, 05:35 PM IST

google News
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 40 தொகுதிகளில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் கட்சி காய் நகர்த்தி வருவதாகத் தெரிகிறது.
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 40 தொகுதிகளில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் கட்சி காய் நகர்த்தி வருவதாகத் தெரிகிறது.

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 40 தொகுதிகளில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் கட்சி காய் நகர்த்தி வருவதாகத் தெரிகிறது.

Jammu and Kashmir: யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு - காஷ்மீரில் விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளக்கட்சி போட்டியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

நாற்பது தொகுதிகளில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தள அரசு?:

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு, தனது அரசியல் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் யூனியன் பிரதேசமான ஜம்மு -காஷ்மீரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது நாற்பது வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று ஊகிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடைசி சட்டமன்றத் தேர்தல் 2014-ல் நடைபெற்றது. அதன் பிறகு பாஜக மற்றும் பிடிபி கூட்டணியிலான அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் அது ஜூன் 2018ஆம் ஆண்டில் சரிந்தது.

வெவ்வேறு கட்சிகளில் சேர ஆர்வம் காட்டும் காஷ்மீர் மக்கள்:

மத்தியில் ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக இருப்பதால், ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஐக்கிய ஜனதா கட்சியில் சேருவது அதிகரித்துள்ளதாகத்தெரிகிறது.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சார்ந்த நிர்வாகி ஷாஹீன் என்பவர் ஊடகத்தினரிடம் பேசுகையில்,  "நாங்கள் எங்கள் குழுக்களை அடிமட்ட மட்டத்தில் இருந்து மறுசீரமைக்கத் தொடங்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார். 
 

ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக ஆகியவை யூனியன் பிரதேசத்தில் ஒரு வலுவான அடித்தளத்தை நிறுவியுள்ளன. 

தனது கட்சி முன்னதாக அதன் தடங்களை உருவாக்கியதாகவும், ஆனால், தலைமைத்துவ பிரச்னைகள் காரணமாக 2000-க்குப் பிறகு அது சரிந்ததாகவும், சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் ஷாஹீன் கூறினார்.

மேலும் அவர்"நாங்கள் 2018-19ஆம் ஆண்டில் நடைபெற்ற பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிட்டோம். தற்போது எங்களிடம் 100-க்கும் மேற்பட்ட கிராமத் தலைவர்கள் மற்றும் நகராட்சி குழு உறுப்பினர்கள் உள்ளனர், "என்று கூறினார்.

ஐக்கிய ஜனதா தளம் பற்றி:

30 அக்டோபர் 2003அன்று ஜனதா தளத்தின் சரத் யாதவ் பிரிவான ’லோக் சக்தி கட்சியை’, இணைத்து ’ஐக்கிய ஜனதா தளம்’ உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, இதுவரை ஒரு மக்களவை அல்லது சட்டமன்ற இடத்தைக்கூட வெல்லவில்லை.

இருப்பினும், ஜம்மு-காஷ்மீரின் தொண்ணூறு இடங்களிலும் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதால், நிதிஷ் குமார் தலைமையிலான கட்சி எவ்வாறு செயல்படும் மற்றும் தனது வேட்பாளரை எவ்வாறு நிறுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு, தனது கட்சித் தொண்டர்களை அமித் ஷா வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி