Tamilisai Soundarajan: ’பாஜகவின் தமிழிசை சவுந்தராஜனை கண்டித்தாரா அமித் ஷா!’ வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Tamilisai Soundarajan: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில், அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பெயரை குறிப்பிடாமல் தமிழிசை விமர்சனம் செய்து வந்தார்.

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற விழா மேடையில் இருந்த தமிழிசை சவுந்தராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்பு
விஜயவாடாவின் புறநகரில் உள்ள கேசரப்பள்ளியில் உள்ள கன்னவரம் விமான நிலையம் அருகே காலை 11.27 மணியளவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவுடன், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரின் மகன் நாரா லோகேஷ் மற்றும் 22 பேரும் பதவியேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி.நட்டா, நிதின் கட்கரி, முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.