தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Modi 3.0 Cabinet Update: புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு? எந்தெந்த துறைகளுக்கு யார் மந்திரி?

Modi 3.0 Cabinet Update: புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு? எந்தெந்த துறைகளுக்கு யார் மந்திரி?

Kathiravan V HT Tamil

Jun 10, 2024, 09:57 PM IST

google News
Modi 3.0 Cabinet Update: புதிதாக பொறுப்பேற்ற மோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் கூடிய நிலையில் இலாகாக்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. (ANI)
Modi 3.0 Cabinet Update: புதிதாக பொறுப்பேற்ற மோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் கூடிய நிலையில் இலாகாக்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Modi 3.0 Cabinet Update: புதிதாக பொறுப்பேற்ற மோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் கூடிய நிலையில் இலாகாக்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிதாக பொறுப்பேற்ற மோடி அமைச்சரவையின் இலாக்காக்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றது. 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்பு உடன் கூடிய இணை அமைச்சர் பதவிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கேபினட் அமைச்சர்கள்

கேபினட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் ஜெய்ராம் கட்கரி, ஜகத் பிரகாஷ் நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், சுப்ரமணியம் ஜெய்சங்கர், மனோகர் லால், எச்டி குமாரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லலன் சிங், சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு, பிரலாத் ஜோஷி, ஜுவல் ஓரம், கிரிராஜ் சிங், அஷ்வினி வைஷ்னா, ஜோதிராதித்யா எம். சிந்தியா, பூபேந்தர் யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரேன் ரிஜுனா தேவி, கிரன் ரிஜுனா தேவி , ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டவியா, ஜி கிஷன் ரெட்டி, சிராக் பாஸ்வான் மற்றும் சிஆர் பாட்டீல் ஆகியோர்கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தனிப்பொறுப்பு உடன் கூடிய இணை அமைச்சர் பொறுப்பு

தனிப்பொறுப்பு உடன் கூடிய இணை அமைச்சர்களாக ராவ் இந்தர்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜுன் ராம் மேக்வால், ஜாதவ் பிரதாப்ராவ் கணபத்ராவ் மற்றும் ஜெயந்த் சவுத்ரி ஆகியோரும், இணை அமைச்சர்களாக ஜிதின் பிரசாத், ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், பங்கஜ் சவுத்ரி, கிரிஷன் பால் ராம்தாஸ் அத்வாலே, ராம் நாத் தாக்கூர் நித்யானந்த் ராய் அனுப்ரியா படேல் வி. சோமன்னா, சந்திர சேகர் பெம்மாசானி, எஸ்பி சிங் பாகேல், சுஸ்ரீ சோபா கரந்த்லாஜே, ஷானு வர்மா சிங், கீர்த்திவர்தன். தாக்கூர், சுரேஷ் கோபி, எல்.முருகன், அஜய் தம்தா, பாண்டி சஞ்சய் குமார், கமலேஷ் பாஸ்வான், பகீரத் சவுத்ரி, சதீஷ் சந்திர துபே, சஞ்சய் சேத், ரவ்னீத் சிங், துர்கதாஸ் உய்கே, ரக்ஷா நிகில் காட்சே, சுகந்தா மஜூம்தார், சாவித்ரி சோத்ஹூத், ராஜ் பூஷன் சௌத் , பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா, ஹர்ஷ் மல்ஹோத்ரா, நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா, முரளிதர் மொஹோல், ஜார்ஜ் குரியன் மற்றும் பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இலாகாக்கள் ஒதுக்கீடு  குறித்த தகவல்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக நிதின்கட்கரி தொடர்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர்களாக அஜய் டாம்டா, ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கரும்  தொடர்வார்கள் என கூறப்படுகின்றது. 

தகவல் ஒலிபரப்புத்துறை அஸ்வினி வைஸ்னவுக்குக்கும், விமான போக்குவரத்துத்துறை ராம் மோகன் ராயுடுவுக்கும், மனிதவள மேம்பாட்டுத்துறை தர்மேந்திர பிரதானுக்கும், சுகாதாரத்துறை ஜே.பி.நட்டாவுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சிராக் பாஸ்வானுக்கும், கலாச்சாரத்துறை கஜேந்திர சிங் ஷக்காவத்திற்கும், கப்பல் மற்றும் துறைமுகத்துறை சர்பானந்த சோனாவாலுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள்  துறை கிரண் ரிஜுஜூவுக்கும், நீர்வளத்துறை சி.ஆர்.பாடீலுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை அரசிடம் இருந்து வெளியாக வில்லை.  

 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை