Madurai Aadeenam on Modi: ’தனிஈழ நாடு கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன்!’ மதுரை ஆதீனம் பகீர் பேட்டி!
Madurai Aadeenam Press Conference: நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துவிடும். அண்ணமலைக்கும் ஓட்டுக்கள் விழுந்து உள்ளது. ஆனால் இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டுப்போட்டுவிட்டனர். யார் கொன்றார்கள் என்பதை நான் சொல்லமாட்டேன் என மதுரை ஆதீனம் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பு ஏற்று உள்ள நிலையில், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று பாரத பிரதமர் மோடி அவர்கள் பொறுப்பு ஏற்று உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், தோல்வி அடைந்தவர்களுக்கும் வாழ்த்துகள். தம்பி சீமானும், அண்ணாமலையும் நிறைய ஓட்டுகளை அளித்து உள்ளனர்.
இலங்கையிலே லட்சக்கணகான மக்களை கொன்று குவித்தவர்களை வெற்றி பெற்றுவிட்டனரே என்ற வருத்தம் எனக்கு தமிழ் மக்கள் மீது உள்ளது. நரேந்திர மோடி அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். இந்திரா காந்தி தூக்கி கொடுத்த கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு உடன் இணைக்க வேண்டும், ஈழத்தில் உள்ள தமிழர்களை பாதுகாக்க தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை பாரத பிரதமரிடம் வைக்கிறேன்.
