தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Meghalaya Cm: 3 மணி நேரத்திற்கு மேல் பேரவையில் பதிலளித்த மேகாலய முதல்வர்!

Meghalaya CM: 3 மணி நேரத்திற்கு மேல் பேரவையில் பதிலளித்த மேகாலய முதல்வர்!

Manigandan K T HT Tamil

Mar 28, 2023, 04:51 PM IST

Conrad Sangma: தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா மேகாலயாவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றார். (PTI)
Conrad Sangma: தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா மேகாலயாவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

Conrad Sangma: தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா மேகாலயாவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

மேகாலயா சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து தொடர்ச்சியாக 3.17 மணி நேரம் பேசினார் முதல்வர் கான்ராட் சங்மா.

ட்ரெண்டிங் செய்திகள்

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

Hemant Soren: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மாலை 5.05 மணிக்கு பேச்சை தொடங்கிய அவர், இரவு 8.17 மணிக்குதான் நிறைவு செய்தார். எனினும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களில் பலர், பாதியிலேயே அவையில் இருந்து வெளியேறினர்.

இதுகுறித்து முதல்வர் சங்மா கூறியதாவது:

சட்டசபை உறுப்பினர்கள் தெரிவித்த அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். நான் 3 மணி நேரத்திற்கு மேலாக நின்றுகொண்டு பேசினேன். அதற்கு காரணம் நாம் 38 லட்சம் மக்களுக்காக உறுதிபூண்டுள்ளோம். உங்கள் (சபாநாயகர்) மூலமாக அனைத்து உறுப்பினர்களும் மக்களை பிரதிபலிக்கிறார்கள்.

ஆனால், கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு பதிலைக் கூறும்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் வெளியேறியது கவலை அளிக்கிறது என்றார் சங்மா.

அதேநேரம், செலஸ்டின் லிங்டோ, கேப்ரியல் வலாங், சார்லஸ் மார்ன்கர், அடெல்பர்ட் நோங்ரம் மற்றும் சார்லஸ் பின்க்ரோப் ஆகிய சில எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடைசிவரை தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

முன்னதாக, முன்னதாக, இந்த ஆண்டு நடந்த தேர்தலில் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (NPP) 26 இடங்களை பிடித்து ஆட்சிக்கு வந்தது.

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா மேகாலயாவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

என்பிபி கூட்டணியில் 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் 26 பேர் அக்கட்சியை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் பாஜ கட்சியைச் சேர்ந்தவர்கள்.

டாபிக்ஸ்