தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: ஈரானில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதா?

Fact Check: ஈரானில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதா?

Fact Crescendo HT Tamil

Jul 21, 2024, 05:34 PM IST

google News
இதில், ‘’ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. (x)
இதில், ‘’ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதில், ‘’ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

‘’ஈரான் நாட்டில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி Fact Crescendo ஆய்வு செய்தது.

தகவலின் விவரம்:

இதனை ஃபேக்ட் கிரெசன்டோ வாசகர்கள் வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஈரான், அதிகாரப்பூர்வமாக ஈரான் இஸ்லாமிய குடியரசு, பெர்சியா என்றும் அழைக்கப்படுகிறது, இது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இது வடமேற்கில் துருக்கி மற்றும் மேற்கில் ஈராக், அஜர்பைஜான், ஆர்மீனியா, காஸ்பியன் கடல் மற்றும் துர்க்மெனிஸ்தான் அமைந்துள்ளது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று தகவல் தேடினோம். அப்போது, இது கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த செய்தி என்றும், ஈரான் நாட்டிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது.

ஆம், ஈராக் நாட்டின் வடக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள மொசூல் நகரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு 2014 முதல் 2016 வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அப்போது, அங்குள்ள Nabi Younis மார்க்கெட் பகுதியில் கடை நடத்திய ஒருவரின் மகன் (Ayham Hussein) சிடி பிளேயரில் பாப் இசை கேட்டுள்ளான். இதனால், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பொது மக்கள் முன்பாக, அந்த 15 வயது சிறுவனின் தலையை வெட்டி, மரண தண்டனையை நிறைவேற்றினர்.

2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த செய்தி வெளியான நிலையில், குறிப்பிட்ட சிறுவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ISIS executioner ‘The Bulldozer’ என்ற நபர் அதே ஆண்டு ஜூன் மாதம் ஈராக்- சிரியா கூட்டுப் படையினரால் கைது செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே, 2016ம் ஆண்டு ஈராக் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் நிகழ்த்திய கொலைக் குற்றம் தொடர்பான புகைப்படம் ஒன்றை எடுத்து, தற்போது ஈரானில் நடக்கும் அட்டூழியம் என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள் என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் ஃபேக்ட் கிரஸண்டோ-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை