Saddam Hussein Memorial Day: அமெரிக்காவின் பெரும்எதிரி.. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் நினைவுநாள்!
சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Saddam Hussein Memorial Day: அமெரிக்காவின் பெரும்எதிரியும் ஈராக்கின் முன்னாள் அதிபருமான சதாம் உசேனின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
யார் இந்த சதாம் உசேன்? ஈராக்கை பூர்வீகமாகக் கொண்ட அல் அவ்ஜா என்னும் ஊரில் 1937ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்தவர், சதாம் உசேன். இவருக்கு நிடல் அல் ஹம்டனி, சமீரா ஷாபந்தர், ஷஜிடா தல்ஹா ஆகிய மூன்று மனைவிகள் இருந்தனர். ஆறு குழந்தைகள் இருந்தனர். 7 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம்: ஈராக்கின் பாத் கட்சி ஆட்சிக்கு வர பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர். 1968ஆம் ஆண்டு அக்கட்சி ஆட்சிக்கு வந்ததும், தனது சொந்தக் காரரான அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றினார், சதாம் உசேன். குறிப்பாக ஈராக்கில் கிளர்ச்சி செய்த ஷியா முஸ்லீம்கள் பலரை, ஒரு சர்வாதிகாரியாக இருந்து கொன்று குவித்தார். பின் தான் அதிபர் ஆன 1979ஆம் ஆண்டு முதல் அமெரிக்க படையெடுப்புக்கு முந்தைய, அதாவது ஏப்ரல் 7,2005 வரையிலான காலகட்டம் வரை அதிபராக இருந்தார், சதாம் உசேன். மேலும் சர்வாதிகார தன்மையுடன் செயல்பட்ட சதாம் உசேன் ஈரான் - ஈராக் போர்(1980 -1988), குவைத் போர் ஆகியப்போர்களை அதிபராக இருந்து நடத்தினார். அதில் இந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பயங்கரவாதத்தை கடுமையாக விமர்சித்ததால் அமெரிக்காவின் நேரடி எதிரி ஆனார். மேலும் அமெரிக்க எதிர்ப்பினால் பல அரேபியர்கள், சதாம் உசேனை கொண்டாடினர். இருப்பினும், 2003ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஈராக் அணு ஆயுதம் வைத்திருப்பதாக அந்நாட்டின் மீது போர் தொடுத்தார். அப்போது சதாம் உசேன் தலைமறைவானார். ஷியா முஸ்லீம்கள் பலரை சதாம் உசேன் இனப்படுகொலை செய்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
பின் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு சதாம் உசேன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பின், டிசம்பர் 13ஆம் தேதி 2003ஆம் ஆண்டு ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருந்த சதாம் உசேனை அமெரிக்கப் படையினர் கைது செய்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அங்கு இவர் மீதான மனித உரிமை செயல்களுக்காக, அமெரிக்க அரசு தூக்குதண்டனை பெற்றுத் தந்தது. சதாம் தனது மரணத்திற்கு எதிராக, கடைசியாக டிசம்பர் 26,2006ஆம் ஆண்டு செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு, டிசம்பர் 20ஆம் தேதி 2006ஆம் ஆண்டு காலை 6:05 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். ஆனால், ஈராக்கில் அணு ஆயுதம் இல்லை என்பது பின்னாளில் உறுதிசெய்யப்பட்டது.
அவருடைய நினைவுநாளை அரேபியர்கள் பலரும் நினைவுகூர்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9