தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ivoomi S1 Ev Scooter: புதிய ஸ்கூட்டர்களை களமிறக்கிய Ivoomi Enargy

iVooMi S1 EV scooter: புதிய ஸ்கூட்டர்களை களமிறக்கிய iVoomi Enargy

Nov 24, 2022, 04:39 PM IST

இந்தியாவில் iVoomi Enargy என்ற நிறுவனம் அதன் S1 வேரியண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் iVoomi Enargy என்ற நிறுவனம் அதன் S1 வேரியண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் iVoomi Enargy என்ற நிறுவனம் அதன் S1 வேரியண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களின் விற்பனையானது அதிகரித்துவிட்டன. பல முன்னணி நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகரித்து விட்ட காரணத்தினால் பல புதிய நிறுவனங்கள் இந்தியாவில் களமிறங்கியுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

Hemant Soren: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Dubai weather: ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, விமானங்கள் ரத்து.. வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

அந்த வகையில் iVoomi Enargy என்ற நிறுவனம் அதன் S1 வேரியண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எக்ஸ்ஷோரூம் விலையானது 69,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் S180,S1200,S1240 என்ற மூன்று வேரியண்ட்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டாப் வேரியண்ட் எக்ஸ் ஷோரூம் விலையானது 1,21,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இதன் டெலிவரி தொடங்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அம்சங்கள்

  • இந்த ஸ்கூட்டரின் ரேஞ்சு 240 கிலோமீட்டர் ஆகும். இதில் ட்வின் பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது 4.2 KWH பவர் மற்றும் 2.5KW டார்க்விசை ஆகும்.
  • மேலும் S1 80 ஸ்கூட்டரில் 1.5KWH பேட்டரி பேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Eco, Rider, Sport ரைடிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதில் ‘Find my Ride’, GPS tracker, மானிட்டர் சிஸ்டம் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.