தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்: தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம்

மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்: தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம்

Marimuthu M HT Tamil

Nov 25, 2024, 06:29 AM IST

google News
மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்: தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம் என சிறப்பு நாள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (Representative Image/Shutterstock/HT)
மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்: தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம் என சிறப்பு நாள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்: தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம் என சிறப்பு நாள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் தொடர்ச்சியான பிரச்னையாகும். குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறை அல்லது கொலை என எதுவாக இருந்தாலும், உலகில் எல்லா இடங்களிலும் பெண்கள் பிரச்னைகளையும் துஷ்பிரயோக பயத்தையும் எதிர்கொள்கின்றனர்.

ஆனால், உலகம் நகர்ந்து அனைத்து பாலினங்களுக்கும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதால், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் நிறுத்த நாம் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. கோவிட்-19 தொற்றுநோய் பெண்களுக்கு எதிரான வன்முறையை துரிதப்படுத்தியது என்றே கூறலாம். பெண்களால் நடக்கும் சில பணிகள் நடக்காமல் இடையூறு ஏற்பட்டதும் இந்த வன்முறை அதிகரித்தது.

வன்முறையைத் தடுக்க நாம் ஒன்றிணைவதற்கான நேரம் இது. பெண்களுக்கான வழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாட நாம் தயாராகி வரும் நிலையில், மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.

தினம்:

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதியன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இன்று கொண்டாடப்படுகிறது.

வரலாறு:

1979ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான மாநாட்டை ஏற்றுக்கொண்டது. ஆனால் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை இன்னும் பரவலாக நடந்துகொண்டு தான் இருக்கிறது.

சமத்துவம், மேம்பாடு, அமைதி மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து தடையாக உள்ளது. 2008ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது விழிப்புணர்வு மற்றும் கொள்கை வகுப்பதை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.1981ஆம் ஆண்டு முதல், பெண் உரிமை ஆர்வலர்கள் நவம்பர் 25ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும், உலக அளவில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இன்றுவரை, மூன்றில் இரண்டு நாடுகளில் மட்டுமே குடும்ப வன்முறை சட்டத்திற்குப் புறம்பாக உள்ளது. அதே சமயம் உலகளவில் 37 நாடுகளில் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 49 நாடுகளில் தற்போது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் இல்லை.

கருப்பொருள்:

இந்த 2024ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் என்பது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள் என்பதாகும். பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றுபட்டு செயல்பட்டு, அதைச் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். கருணைகாட்டக் கூடாது என்பதுவே அவர்களுக்கான வழிகாட்டலாகும்.

உலகெங்கிலும் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளை ஆராய்வதற்கும், வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு அத்தியாவசிய ஆதரவை வழங்குவதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி