Devara: கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி..அதிகப்படியான வன்முறை! நான்கு காட்சிகளுக்கு கட் - முழு விவரம்-devara part 1 gets 4 cuts in censor and ready to release on september 27 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Devara: கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி..அதிகப்படியான வன்முறை! நான்கு காட்சிகளுக்கு கட் - முழு விவரம்

Devara: கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி..அதிகப்படியான வன்முறை! நான்கு காட்சிகளுக்கு கட் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 13, 2024 03:45 PM IST

Devara Part 1 Censor: கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைக்கும் காட்சியுடன், அதிகப்படியான வன்முறை காட்சி ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கும் தேவரா படத்தில் இடம்பிடித்துள்ளதால் சென்சாரில் நான்கு காட்சிகளுக்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த நீளம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது

Devara: கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி..அதிகப்படியான வன்முறை! நான்கு காட்சிகளுக்கு கட் - முழு விவரம்
Devara: கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி..அதிகப்படியான வன்முறை! நான்கு காட்சிகளுக்கு கட் - முழு விவரம்

இந்த படத்தை தொடர்ந்து இம்மாத வெளியீடாக அறிவிக்கப்பட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களாக கங்கனா ரணவத் நடித்த எமர்ஜென்சி, ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா பார்ட் 1 ஆகிய படங்கள் உள்ளன.

இதில் ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கும் தேவரா படத்தின் ட்ரெய்லர் கடந்த இரு நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தேவரா படம் தெலுங்கில் உருவாகி இருக்கும் நிலையில் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

தேவரா சென்சார்

தெலுங்கு சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தேவரா சென்சார் செய்யப்பட்டிருக்கும் நிலையில், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

படத்தை பார்த்தை சென்சார் அதிகாரிகள் நான்கு காட்சிகளை நீக்குமாறு தெரிவித்துள்ளனராம். அதிகப்படியான வன்முறை காட்சிகள் இடம்பிடித்திருப்பதால் அவற்றை நீக்குமாறு கூறியுள்ளனராம்.

கர்ப்பிணி பெண்ணை ஒரு கதாபாத்திரம் எட்டி உதைக்கும் காட்சிகள், தாயை எட்டி உதைக்கும் காட்சி, கத்தியில் ஒரு கதாபாத்திரத்தை தொங்கவிடுவது, நான்காவதாக சுறா மீது என்டிஆர் பயணிப்பது போல் சிஜி காட்சி ஆகியவற்றை நீக்குமாறு சென்சார் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூனியர் என்டிஆர் சுறா மீது செல்லும் காட்சி சிஜியாக இருப்பதால் அதில் பொறுப்புதுறப்பு கார்டு போடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தேவரா படம் பற்றி

இரண்டு பகுதிகளில் உருவாகும் தேவரா திரைப்படம் இந்தியா கடலோர பகுதியை பின்னணியில் அமைக்கப்பட்ட அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. படத்தை கொரட்லா சிவா இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக கொரட்லா சிவா - ஜூனியர் என்டிஆர் கூட்டணி 2016இல் வெளியான ஜனதா கேரேஜ் என்ற ஆக்சன் த்ரில்லர் வெற்றி படத்தை தந்துள்ளனர்.

ஜான்வி கபூர் முதல் தெலுங்கு படம்

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருந்து வரும் ஜான்வி கபூர் நடிக்கும் முதல் தெலுங்கு படமாக தேவரா உருவாகியுள்ளது. பாலிவுட் ஹீரோ சைஃப் அலி கான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவவே படத்திலிருந்து வெளியான சிங்கிள் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

தேவரா படம் வட அமெரிக்காவில் 35,000 டிக்கெட்டுகளுக்கு மேல் தற்போதே விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு மேல் விரைவாக விற்கப்பட்ட இந்தியத் திரைப்படமாக இது மாறியுள்ளதாக படத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூனியர் என்டிஆர் காயம்

தேவரா இறுதிகட்ட படப்பிடிப்பின்போது ஜூனியர் என்டிஆர் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த அவரது குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், "என்டிஆர் சில நாள்களுக்கு முன்பு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இடது மணிக்கட்டில் லேசான சுளுக்கு ஏற்பட்டது. அவரது கை அசைக்க முடியாமல் இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

கைகளில் காயம் இருந்தபோதிலும், தேவாரா படப்பிடிப்பில் தனது காட்சிகளில் நடித்து முடித்தார்" என தெரிவிக்கப்பட்டது.

ஜூனியர் என்டிஆர் கையில் கட்டு அணிந்தவாறு இருக்கும் புகைப்படமும் பகிரப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.