தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Indore Temple: இந்தூரில் கோயில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து-13 பேர் பலி

Indore Temple: இந்தூரில் கோயில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து-13 பேர் பலி

Manigandan K T HT Tamil

Mar 30, 2023, 06:16 PM IST

Indore: படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
Indore: படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

Indore: படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

Hemant Soren: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Dubai weather: ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, விமானங்கள் ரத்து.. வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

ஸ்ரீபலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோயிலில் பழமையான படிக்கிணறு உள்ளது. இங்கு ராமநவமியையொட்டி இன்று (மார்ச் 30) ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது, படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். 13 பேர் உயிரிழந்துவிட்டனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றனர்.

ராம நவமியின் போது பிரார்த்தனை செய்ய ஏராளமான மக்கள் கோவிலில் கூடியிருந்தபோது, ​​​​மதியம் 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. சில பக்தர்கள் 'யாகம்' செய்து கொண்டிருந்த போது, ​​பலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

இடிந்து விழுந்த கிணறு குறைந்தது 50-60 அடி ஆழம் கொண்டதாகும். தண்ணீர் நிறைந்து இருந்தது. கிணறு அமைந்துள்ள இடம் குறுகியதாக இருப்பதால், மீட்பு பணியின் போது இடையூறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

25 பேர் விழுந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தூர் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை கவனித்து வருவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

கிணற்றில் சிக்கியவர்களை கயிறுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். முதல்வர் சவுகானிடம் பேசி, நிலைமையை கேட்டறிந்தேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்