தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Former Maharashtra Chief Minister Uddhav Thackeray Condemned Rahul Gandhi's Speech On Savarkar

’சாவர்க்கர் கடவுளை போன்றவர்’ ராகுலை விளாசும் கூட்டணி கட்சி தலைவர் தாக்ரே!

Kathiravan V HT Tamil

Mar 27, 2023, 11:00 AM IST

Rahul Gandhi: “இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் மன்னிப்பு கேட்க நான் சாவர்கர் இல்லை என்றும் என் பெயர் ராகுல் காந்தி” என்றும் தெரிவித்திருந்தார்.
Rahul Gandhi: “இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் மன்னிப்பு கேட்க நான் சாவர்கர் இல்லை என்றும் என் பெயர் ராகுல் காந்தி” என்றும் தெரிவித்திருந்தார்.

Rahul Gandhi: “இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் மன்னிப்பு கேட்க நான் சாவர்கர் இல்லை என்றும் என் பெயர் ராகுல் காந்தி” என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் பிரதமர் நரேந்திரமோடி, நீரவ்மோடி, லலித் மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் பூர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படது.

ட்ரெண்டிங் செய்திகள்

Prajwal Revanna Case: தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மேலும் சிக்கல்..பிடியை இறுக்கும் கர்நாடக போலீஸ்!

Prajwal Revanna case: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

Jain monks: ஜெயின் துறவியாக மாறிய பெங்களூரு தொழிலதிபரின் மனைவி, 11 வயது மகன்!-உருக்கமான வீடியோ

IIT students: ‘20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை.. MIT-ல் இந்த எண்ணிக்கை அதிகம்’-RTI இல் அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில் 2 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வயநாடு லோக் சபா தொகுதி காலியானதாகவும் மக்களவை செயலகத்தால் அறிவிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனக்கூறி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளும் இதனை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி “இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் மன்னிப்பு கேட்க நான் சாவர்கர் இல்லை என்றும் என் பெயர் ராகுல் காந்தி” என்றும் தெரிவித்திருந்தார்.

சாவர்க்கர்

சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசி இருந்த சிவசேனா உத்தவ் தாக்ரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே, சாவர்கர் குறித்த ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் ”ராகுல் காந்தியிடம் நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில்தான் பாரத் ஜோடா யாத்திரையில் ஒநாங்கள் பங்கேற்றோம். ஆனால் சாவர்கர் எங்களுக்கு கடவுளை போன்றவர். அவரை அவமரியாதை செய்வதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. சுதந்திர போராட்டத்தில் சாவர்கர் அடைந்த துன்பத்தை கற்பனை செய்து கூட பார்க்கன் முடியாது.

டாபிக்ஸ்