தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kabaddi Players Food In Toilet: கபடி வீரர்களுக்குக் கழிவறையில் உணவு!

Kabaddi Players Food In Toilet: கபடி வீரர்களுக்குக் கழிவறையில் உணவு!

Sep 20, 2022, 04:53 PM IST

உத்தரப் பிரதேசத்தில் கபடி வீரர்களுக்குக் கழிவறையில் உணவு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கபடி வீரர்களுக்குக் கழிவறையில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கபடி வீரர்களுக்குக் கழிவறையில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்குக் கழிவறையில் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

உணவுப் பொருட்கள் உள்ள பாத்திரங்கள் அனைத்தும் கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது. கபடி வீரர்கள் அனைவரும் தங்களது உணவுகளைக் கழிவறைகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோ காட்சியில், " கழிவறைகள் வைக்கப்பட்டுள்ள உணவுப் பாத்திரங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள் தட்டுகளில் உணவை எடுத்துச் செல்கின்றனர்." இந்த வீடியோ காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த வீடியோ காட்சி விவகாரம் குறித்து சஹாரன்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் அனிமேஷ் சக்சேனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாநில அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இடச் சிக்கல்கள் காரணமாக உணவு கழிவறையில் வைக்கப்பட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அனிமேஷ் சக்சேனா தெரிவித்துள்ளார்.