தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check : உடல் மெலிந்து படுத்த படுக்கையாக கிடக்கும் மிஸ்டர் பீன்.. வைரலாகும் போட்டோ.. இது உண்மையா?

Fact Check : உடல் மெலிந்து படுத்த படுக்கையாக கிடக்கும் மிஸ்டர் பீன்.. வைரலாகும் போட்டோ.. இது உண்மையா?

Fact Crescendo HT Tamil

Jul 17, 2024, 02:37 PM IST

google News
Fact Check : மிஸ்டர் பீன் என்று அழைக்கப்படும் ஹாலிவுட் பட நடிகர் ரோவன் அட்கின்சன் உடல்நலம் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக உள்ளது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
Fact Check : மிஸ்டர் பீன் என்று அழைக்கப்படும் ஹாலிவுட் பட நடிகர் ரோவன் அட்கின்சன் உடல்நலம் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக உள்ளது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

Fact Check : மிஸ்டர் பீன் என்று அழைக்கப்படும் ஹாலிவுட் பட நடிகர் ரோவன் அட்கின்சன் உடல்நலம் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக உள்ளது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

மிஸ்டர் பீன் புகழ் ரோவன் அட்கின்சன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பது போன்று ஒரு புகைப்படம் மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக Fact Crescendo ஆய்வு செய்தது.

தகவலின் விவரம்

தகவலின் விவரம்

உண்மைப் பதிவைக் காண

மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் 1990ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டு இருக்கும் புகைப்படங்கள் என்று இரண்டு புகைப்படங்களை சேர்த்து ஒன்றாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில்,மிஸ்டர் பீன் “யாருக்கெல்லாம் நம்ம Mr.Bean பிடிக்கும்👍இளமை அது போன…அது திரும்பாது….

இருக்கும் வரை நம்மை சுற்றி இருப்பவர்களையும் நாமும் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்…எல்லோருக்கும் ஒரு காலம் முதுமை வரும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்

மிஸ்டர் பீன் என்று அழைக்கப்படும் ஹாலிவுட் பட நடிகர் ரோவன் அட்கின்சன் உடல்நலம் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக உள்ளது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவோ, வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவே எந்த செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று அறிய Fact Crescendo ஆய்வு செய்தது.

அந்த புகைப்படத்தில் மிஸ்டர் பீன் தலை மட்டும் எடிட் செய்யப்பட்டது போல் உள்ளது. எனவே, இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் உள்ளிட்ட புகைப்படங்களின் உண்மை கண்டறிய உதவும் தளத்தில் பதிவேற்றித் தேடியுள்ளனர். ஆனால் இந்த படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த தகவல் உண்மையா

உண்மைப் பதிவைக் காண

கூகுளில் ரோவன் அட்கின்சன் உடல் நிலை என்று டைப் செய்து தேடினோம். சமீபத்தில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. ரோவன் அட்கின்சன் மிக சமீபத்திய செய்தி என்று தேடிய போது, ஜூலை 13, 2024 அன்று வெளியான ரோவன் அட்கின்சன் பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பான செய்தி மற்றும் வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. அதில் கடந்த வாரம் பிரிட்டனில் நடந்த ஃபார்முலா 1 கார் பந்தயமான பிரிட்டிஷ் கிரான்ட் ப்ரிக்ஸ் (British Grand Prix) போட்டியைக் காண ரோவன் அட்கின்சன் வந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த நிகழ்ச்சியில் ரோவன் அட்கின்சன் அளித்த பேட்டியை எக்ஸ் தளத்தில் வெளியாகி இருந்த இணைப்பும் கிடைத்தது. மேலும், யூடியூபில் வௌியான வீடியோவும் கிடைத்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு ஜூலை 11ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் மிஸ்டர் பீன் இருப்பது போல் இருந்தது. ஆனால் ஜூலை 13ம் தேதி வெளியான செய்தியில் கடந்த வாரத்தில் நடந்த ஃபார்முலா 1 கார் பந்தயத்தைக் காண ரோவன் அட்கின்சன் வந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் ரோவன் அட்கின்சன் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று பரவும் தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு

படுத்த படுக்கையாக மாறிய மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்தி முதலில் Fact Crescendo-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை