Rajinikanth Dance: இவருக்கு மட்டும் வயசே ஆகாதா? - அம்பானி திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினிகாந்த்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth Dance: இவருக்கு மட்டும் வயசே ஆகாதா? - அம்பானி திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினிகாந்த்

Rajinikanth Dance: இவருக்கு மட்டும் வயசே ஆகாதா? - அம்பானி திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினிகாந்த்

Aarthi Balaji HT Tamil
Published Jul 13, 2024 10:48 AM IST

Rajinikanth Dance: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் ரஜினிகாந்த் நடனமாடி அசத்தினார்.

இவருக்கு மட்டும் வயசே ஆகாதா? - அம்பானி திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினிகாந்த்
இவருக்கு மட்டும் வயசே ஆகாதா? - அம்பானி திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினிகாந்த்

அனந்த் அம்பானியின் திருமணத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி சிறப்பாக நடனமாடி உள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்துக்கு இப்போது 73 வயது. இந்த வயதிலும் அவரது ஆற்றல் குறையவில்லை. மிகுந்த உற்சாகத்துடன் திருமணத்திற்கு வந்து நடனமாடி அசத்தி உள்ளார். இதை பார்த்த பலரும், இவருக்கு மட்டும் வயது குறைந்து கொண்டே போகிறதே என பேசி வருகிறார்கள்.

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் 'தலைவர்'

ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா, மகள் சௌந்தர்யா, மருமகன், பேரன் ஆகியோரும் வருகை தந்து இருந்தார்கள். மேலும், பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், ஷாருக்கான், கௌரி கான், ஆர்யன் கான், சுஹானா கான், விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப், சஞ்சய் தத், ஜெனிலியா தேஷ்முக், ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த், கியாரா அத்வானி, ஆலியா பட், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலர் வந்து அம்பானி குடும்பத்தின் மகிழ்ச்சியான திருமணத்தில் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

அனந்த் - ராதிகா திருமணம்

அனந்தும், ராதிகாவும், முகேஷ் அம்பானியின் வேர்ல்ட் ஜியோ சென்டரில் அரச முறைப்படி திருமணம் செய்துகொண்டார்கள். இந்த திருமணத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பாலிவுட்டில் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர், கிரிக்கெட் மற்றும் அரசியல் உலக பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.

மேலும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த திருமணத்தில் உலகம் முழுவதும் இருந்து 1200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

கூலி

ரஜினிகாந்தின் சமீபத்திய படமான கூலி, லோகேஷ் சினிமா பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லை. லோகேஷ் இந்தப் படத்தை தனது பிரபஞ்சத்தில் இருந்து பிரித்து உருவாக்குகிறார். மேலும் ரஜினிகாந்த் வித்தியாசமான மாஸ் அவதாரத்தில் நடிக்க இருப்பதாகவும், ரஜினியின் கேரியரில் இது மிகப்பெரிய ஆக்ஷன் த்ரில்லர் திட்டமாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

வேட்டையன்

சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமா ஹீரோ ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள், லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரு

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9