தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Employee Gets 1.03 Crore Salary Yearly For Doing Nothing

வருடம் ரூ. 1.3 கோடி சம்பளம் வேணாம் - வேலை தான் வேணும்!

Divya Sekar HT Tamil

Dec 06, 2022, 10:42 AM IST

அயர்லாந்தில் தனக்கு வேலை ஏதும் கொடுக்காமல், வருடத்திற்கு ரூ 1.3 கோடி சம்பளம் தரும் நிறுவனம் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டப்ளின்: ஐரிஷ் ரயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராகப் பணிபுரிகிறார் டெர்மாட் அலஸ்டெய்ர் மில்ஸ். இவர் தனக்கு வேலை ஏதும் கொடுக்காமல், வருடத்திற்கு ரூ 1.3 கோடி சம்பளம் தருவதாக அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

International Labour Day: தொழிலாளர் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

Covishield side-effects: இதை உடனே படிங்க.. கோவிஷீல்டு தடுப்பு மருந்தால் இரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு இருக்கா?

President of Delhi Congress: டெல்லி காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்

New Chief of Naval Staff: புதிய கடற்படை தளபதியாக அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பொறுப்பேற்பு

இவர் தொடர்ந்த இந்த விநோத வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து டெர்மாட் அலஸ்டெய்ர் மில்ஸ் கூறுகையில், ”ஆரோக்கியமான பணிச் சூழல் ஒரு நபரின் மனநலத்திற்கு மிகவும் அவசியம். ஆனால், தன் பணியே தனக்கு பெரிய அழுத்தமாக ஆகியுள்ளது.

வாரத்தில் 5 நாட்களில் நான் 2 நாட்கள் தான் அலுவலகமே செல்கிறேன். அப்போதும் கூட சரியான வேலை இல்லாமல் வீடு திரும்பிவிடுவேன். அலுவலக நேரத்தில் செய்தித்தாள் வாசிக்கிறேன், சாண்ட்விச் சாப்பிடுகிறேன், நடைப்பயிற்சி கூட சென்று வருகிறேன்.

எனது நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் பற்றி நான் ஒருமுறை வெளிக்கொண்டு வந்தேன். அதன் பின்னர் தான் இது எல்லாம் ஆரம்பித்தது. என் திறமைக்கு ஏற்ப எந்த ஒரு வேலையும் தருவதில்லை. அதனால்தான் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்" என்றார்.

டாபிக்ஸ்