தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Disha App Saves Woman:ஆந்திராவில் சண்டாளர்களிடம் பெண்ணை காப்பாற்றிய திஷா ஆப்

Disha App Saves Woman:ஆந்திராவில் சண்டாளர்களிடம் பெண்ணை காப்பாற்றிய திஷா ஆப்

I Jayachandran HT Tamil

Nov 23, 2022, 10:31 PM IST

திஷா செயலி மூலம் எஸ்ஓஎஸ் அனுப்பிய பெண்ணை நெல்லூர் போலீசார் நள்ளிரவில் மீட்டனர்.
திஷா செயலி மூலம் எஸ்ஓஎஸ் அனுப்பிய பெண்ணை நெல்லூர் போலீசார் நள்ளிரவில் மீட்டனர்.

திஷா செயலி மூலம் எஸ்ஓஎஸ் அனுப்பிய பெண்ணை நெல்லூர் போலீசார் நள்ளிரவில் மீட்டனர்.

நெல்லூர்: ஆந்திர மாநிலம் காவாலி, தும்மல்பெண்டா அருகே உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெல்லூரை சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

இது குறித்து காவாலி ரூரல் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சில காலமாக நட்பாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை ஆசைவார்த்தை கூறி ஞாயிற்றுக்கிழமை இரவு கடற்கரை ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது இரண்டு நண்பர்களையும் ரிசார்ட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில், மூவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய விரும்பினர். அந்தப் பெண் இதற்கு மறுத்ததால் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்றனர். தங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் கூறி அந்தப் பெண்ணை தாக்கினர்.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கழிவறைக்குச் செல்லவேண்டும் என்று கூறி அங்கு கதவை அடைத்துக் கொண்டார். பின்னர் அந்தப் பெண் தனது மொபைல் போனில் உள்ள திஷா செயலியில் உள்ள எஸ்ஓஎஸ் எனப்படும் ஆபத்துகால உதவி பட்டனை அழுத்தினார்.

உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அருகில் இருந்ததால் அவளால் அழைப்பிற்கு பதிலளிக்க முடியவில்லை.

ஆப்பை டவுன்லோடு செய்யும் போது கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் திஷா கொடுத்த மாற்று எண்ணை அழைத்தனர். அந்த பெண்ணின் நண்பரிடம் அந்த எண் உள்ளது. உடனே அவரை போனில் அழைத்து விவரத்தைக் கேட்டுள்ளனர்.

ஆனால் இதற்குள் அந்தப் பெண்ணின் இருப்பிடத்தை போலீசார் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர்.

நள்ளிரவு 1:19 மணிக்கு திஷா ஆப் மூலம் தகவல் கிடைத்ததாகவும், சில நிமிடங்களில் ரிசார்ட்டுக்கு சென்று பாதிக்கப்பட்டவரை மீட்டதாகவும் காவல் ஆய்வாளர் ராஜேஷ் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட அவுலா பிரசாத், கோந்துரு வெங்கடேஷ்வர்லு, காவாலி கிராமிய மண்டலத்தைச் சேர்ந்த கடங்கரி சங்கரய்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பெண்ணை மீட்ட காவாலி ரூரல் சிஐ, ஏஎஸ்ஐ கே.சிவய்யா, காவலர்கள் வி.முரளி, எஸ்.ராஜேஷ்பாபு ஆகியோருக்கு நெல்லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.எச்.விஜய் ராவ் வெகுமதி வழங்கினார்.

பெண்கள் திஷா செயலியை பதிவிறக்கம் செய்து அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று விஜய் ராவ் பரிந்துரைத்தார். மாவட்டம் முழுவதும் பீட் கொள்கையை கடுமையாக அமல்படுத்தியதால் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்க முடிகிறது என்றா விஜய் ராவ்.

டாபிக்ஸ்