தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Dalai Lama's 89th Birthday: திபெத் உரிமை போராட்டம் முதல் அமைதிக்கான நோபல் பரிசு வரை! தலாய் லாமா கடந்து வந்த பாதை!

Dalai Lama's 89th Birthday: திபெத் உரிமை போராட்டம் முதல் அமைதிக்கான நோபல் பரிசு வரை! தலாய் லாமா கடந்து வந்த பாதை!

Kathiravan V HT Tamil

Jul 06, 2024, 06:00 AM IST

google News
தலாய் லாமா இந்தியாவில் இருந்து கொண்டே, திபெத்திய மக்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்கான குரலை கொடுத்து வருகின்றார். திபெத்துக்கான அவரது அகிம்சைப் போராட்டம் அவருக்கு 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. (HT_PRINT)
தலாய் லாமா இந்தியாவில் இருந்து கொண்டே, திபெத்திய மக்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்கான குரலை கொடுத்து வருகின்றார். திபெத்துக்கான அவரது அகிம்சைப் போராட்டம் அவருக்கு 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

தலாய் லாமா இந்தியாவில் இருந்து கொண்டே, திபெத்திய மக்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்கான குரலை கொடுத்து வருகின்றார். திபெத்துக்கான அவரது அகிம்சைப் போராட்டம் அவருக்கு 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

14 வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ ஜூலை 6, 1935 அன்று வடகிழக்கு திபெத்தின் அம்டோவின் தாக்சரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். 

லாமோ தோண்டூப் என்ற இயற்பெயரை கொண்ட அவர், 13 வது தலாய் லாமா துப்டன் கியாட்சோவின் மறு பிறவியாக அங்கீகரிக்கப்பட்டார்.  1939 ஆம் ஆண்டில், அவர் திபெத்தின் தலைநகரான லாசாவில் முறையாக அரியணை ஏறினார்.

கல்வி மற்றும் துறவறப் பயிற்சி

சிறு வயதில் இருந்தே, தலாய் லாமா கடுமையான துறவறக் கல்வியை கற்றார். 1959 ஆண்டு வாக்கில், அவர் பெளத்த தத்துவத்தில் முனைவர் பட்டத்திற்கு சமமான ’கெஷே லராம்பா’ என்ற பட்டத்தைப் பெற்றார். அவரது கல்வி ஆனது, தர்க்கம், திபெத்திய கலை மற்றும் கலாச்சாரம், மற்றும் புத்த தத்துவம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை உள்ளடக்கியதாக இருந்தது. 

1959 ஆம் ஆண்டில், திபெத்திய எழுச்சியை சீன இராணுவம் ஒடுக்கிய பின்னர் தலாய் லாமா இந்தியாவுக்கு வந்தார். அப்போது முதல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகின்றார்.  

திபெத் மற்றும் உலகளாவிய செல்வாக்கு

தலாய் லாமா இந்தியாவில் இருந்து கொண்டே, திபெத்திய மக்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்கான குரலை கொடுத்து வருகின்றார். திபெத்துக்கான அவரது அகிம்சைப் போராட்டம் அவருக்கு 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

திபெத்தியப் பிரச்சினைகளைத் தவிர, தலாய் லாமா ஒரு உலகளாவிய ஆன்மீகத் தலைவராக அறியப்படுகின்றார். இரக்கம், அகிம்சை மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் போன்ற மதிப்புகளை பற்றிய அவரது உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. 

தலாய் லாமாவின் தத்துவங்கள்  

1) "ஒவ்வொரு நாளும், நீங்கள் எழுந்திருக்கும்போது, இன்று நான் உயிருடன் இருப்பதற்கு அதிர்ஷ்டசாலி, எனக்கு ஒரு விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை உள்ளது, நான் அதை வீணாக்கப் போவதில்லை. என்னை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுக்கு என் இதயத்தை விரிவுபடுத்தவும் எனது எல்லா சக்திகளையும் பயன்படுத்தப் போகிறேன்; அனைத்து உயிர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் ஞானத்தை அடைவது".

2) "என்ன வகையான சிரமங்கள் இருந்தாலும், எவ்வளவு வேதனையான அனுபவம் இருந்தாலும், நாம் நம் நம்பிக்கையை இழந்தால், அதுவே நமது உண்மையான பேரிழப்பு"

3) "ஒரு சிக்கல் சரிசெய்யக்கூடியதாக இருந்தால், அதைப் பற்றி நீங்கள் ஏதாவது செய்ய முடியும் என்று ஒரு சூழ்நிலை இருந்தால், பின்னர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை சரிசெய்ய முடியாவிட்டால், கவலைப்படுவதில் எந்த நன்மையும் இல்லை"

4) “வாழ்க்கையில் உண்மையான சோகத்தை நாம் சந்திக்கும்போது, நாம் இரண்டு வழிகளில் செயல்படலாம் - நம்பிக்கையை இழந்து சுய அழிவு பழக்கங்களில் விழுவதன் மூலம் அல்லது நமது உள் வலிமையைக் கண்டுபிடிக்க சவாலைப் பயன்படுத்துவதன் மூலம்”

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி