தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Budget 2024: காங்கிரஸ் சொன்னதை காப்பி அடிச்சி வச்சி இருக்கீங்க! பட்ஜெட்டை பிரித்து மேய்ந்த ராகுல் காந்தி!

Budget 2024: காங்கிரஸ் சொன்னதை காப்பி அடிச்சி வச்சி இருக்கீங்க! பட்ஜெட்டை பிரித்து மேய்ந்த ராகுல் காந்தி!

Kathiravan V HT Tamil

Jul 23, 2024, 05:51 PM IST

google News
Budget 2024: கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்யும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், சாமானிய இந்தியர்களுக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
Budget 2024: கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்யும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், சாமானிய இந்தியர்களுக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

Budget 2024: கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்யும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், சாமானிய இந்தியர்களுக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

மூன்றாவது முறையாக பொறுப்பு ஏற்று உள்ள மோடி அரசின் இடைக்கால பட்ஜெட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். 

நிர்மலா சீதாராமன் உரை

கூட்டணி கட்சிகள் ஆதரவு உடன் மூன்றாவது முறையாக பொறுப்பு ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

9 முன்னுரிமைகள்

இதில் உற்பத்தி, வேலைகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம் 

கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்வதற்காக பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்ய பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதில் சாதாரண இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் முந்தைய பட்ஜெட் மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளை காப்பி அடித்து பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது என விமர்சனம் செய்து உள்ளார்.  

மல்லிகார்ஜுன் கார்கே விமர்சனம் 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "மோடி அரசின் 'காப்பிகேட் பட்ஜெட்' மூலம் காங்கிரஸின் நியாய பத்ராவை கூட சரியாக நகலெடுக்க முடியவில்லை! மோடி அரசின் பட்ஜெட் அரை மனதுடன் இலவசங்களை ஏமாற்றி விநியோகம் செய்கிறது என கூறி உள்ளார். 

10 ஆண்டுகளுக்குப் பிறகு, "ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைகள்" என்ற முழக்கத்தின் சுமைகளைத் தாங்கும் இளைஞர்களுக்கு வரையறுக்கப்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

"விவசாயிகளுக்கான மேலோட்டமான பேச்சுக்கள் மட்டுமே பட்ஜெட்டில் உள்ளன. ஒன்றரை மடங்கு MSP மற்றும் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் ஆகியவை அனைத்தும் தேர்தல் மோசடியாக மாறிவிட்டன. இந்த அரசாங்கத்திற்கு கிராமப்புற ஊதியத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று கார்கே குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியை பின்பற்றியது மகிழ்ச்சி 

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் தங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளனர். 

"தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நிதியமைச்சர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் படித்தார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். காங்கிரஸ் அறிக்கையின் 30-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகையை அவர் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 11ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ஒரு கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம் உட்பட காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை நிதியமைச்சர் நலல் எடுத்து உள்ளதாக கூறினார். 

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அறிவிப்பு இல்லை 

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "தரவு மற்றும் புள்ளியியல் துறை குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 2021ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அது இன்னும் நடத்தப்படவில்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று கூறினார். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி