Lok Sabha election 2024 : உற்சாகமாக வாக்களித்த அஜித்.. எடப்பாடி .. ப.சிதம்பரம்.. தமிழசை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election 2024 : உற்சாகமாக வாக்களித்த அஜித்.. எடப்பாடி .. ப.சிதம்பரம்.. தமிழசை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்!

Lok Sabha election 2024 : உற்சாகமாக வாக்களித்த அஜித்.. எடப்பாடி .. ப.சிதம்பரம்.. தமிழசை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 19, 2024 09:11 AM IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை விருகம்பாக்க வாக்கு சாவடியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட கண்டனூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

உற்சாகமாக வாக்களித்த அஜித்.. எடப்பாடி .. பா.சிதம்பரம்.. தமிழசை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்!
உற்சாகமாக வாக்களித்த அஜித்.. எடப்பாடி .. பா.சிதம்பரம்.. தமிழசை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்!

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். மேலும் நடிகர் அஜித்  எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்.

முதல் ஆளாக வாக்கை பதிவு செய்த அஜித்!

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கி உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருந்த நிலையில், நடிகர் அஜித் குமார் 6.40 மணிக்கே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். காலை 7 மணிக்கு முதல் ஆளாக தன் வாக்கை பதிவு செய்தார்

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தமிழிசை சவுந்தர் ராஜன்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்கு சாவடியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

ப.சிதம்பரம்

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட கண்டனூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை அளித்தார்.

அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சொந்த கிராமமான அரவக்குறிச்சி ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். அவர் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஆர் பாலு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சௌமியா அன்புமணி

திண்டிவனத்தில் உள்ள வாக்கு சாவடியில் பாமாக வேட்பாளர் சௌமியா அன்பு மணி தனது வாக்கை பதிவு செய்தார்.

செல்போனுக்கு தடை

தேர்தலில் வாக்கு அளிக்க செல்லும் பகுதியில் வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களை வெளியில் வைத்து செல்லவும் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.