Air pollution: காற்று மாசுபாட்டால் கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்.. இந்தியர்கள் எவ்வளவு சதவீதம் அதிர்ச்சி அறிக்கை!
Jun 19, 2024, 07:24 PM IST
Air pollution: உலக அளவில் 2021-ல் 8.1 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர். அதாவது இறந்தவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர். - அதிர்ச்சி அறிக்கை!
Air pollution: இந்தியாவில் 5 வயதிற்கு கீழான குழந்தைகளில் 464 பேர் நாள் ஒன்றுக்கு காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள Health Effects Institute, சமீபத்தில் வெளியிட்ட State of Global Air(SoGA) அறிக்கையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 5 வயதிற்கு கீழான 464 குழந்தைகள், காற்று மாசுபாட்டால் முன்கூட்டியே இறப்பதாக தகவல் வெளிவந்து, அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
காற்று மாசுபாட்டால் அதிகரிக்கும் உயிரிழப்பு
இந்தியாவில் 2021ல்,அனைத்து வயதினரில் 2.1 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர் என்றும்,இரத்தக்கொதிப்புக்கு அடுத்தபடியாக பெரிய உயிர்கொல்லி நோயாக காற்று மாசுபாடு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களாக,சர்க்கரைநோய்,புகைபிடித்தல் போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது.
உலக அளவில் 2021-ல் 8.1 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர். இறந்தவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர் என்பது அதிர்ச்சி தகவலாக அமைந்து இருக்கிறது.
2021ல் இந்தியா, சைனாவில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 55% எனத் தெரியவந்துள்ளது. அதாவது, இந்தியா-2.1 மில்லியன் இறப்புகள்; சைனாவில் 2.3 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
தொற்றாநோய்களின் இறப்பிற்கு பெரும் பங்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது.
2021ல்,
மாரடைப்பு-40%
நுரையீரல் புற்றுநோய்-33%
சர்க்கரைநோய்-வகை2-20%
மூளை பாதிப்பு(Stroke)-41%
நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு(COPD)-70%
இந்த இறப்புகளுக்கு காற்று மாசுபாடே காரணமாக இருந்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், இந்தியாவில் 38% சுகாதாரமாக வாழும் வருடங்கள், கண்புரை (Cataract) காரணமாக இழக்கப்பட்டுள்ளது என்றும், கண்புரையும் காற்று மாசுபாடு காரணமாக நிகழ முடியும் என்பதும் தெரியவந்துள்ளது.
சட்டங்கள் யாருக்காக இருக்கிறது?
இருப்பினும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்திய தொழிற்நிறுவனங்கள்+பிற(ர்) மீது எந்த நடவடிக்கையும் "Polluter Pays"-காற்று மாசுபாட்டை ஏற்படுத்துபவரே, அதன் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் என்பது தெரியவில்லை? சட்டங்கள் யார் நலன்களைக் காக்க!? உள்ளது?
தலைநகர் சென்னையில், சூழல் பூங்கா! அமைந்துள்ள அடையாற்றில், சாக்கடை கழிவுநீர் கலந்து மீன்கள் இறந்து போனாலும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் தமிழக அரசு இருப்பதிலிருந்து, சூழல் பிரச்சினையில் அரசின் அக்கறையை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில், சாக்கடை கழிவுநீர் அடையாற்றில் நேரிடையாக கலப்பது புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இருப்பினும், தமிழக அரசு மழுப்பலான பதிலையே கூறி வருகிறது. காற்று மாசுபாட்டை, சூழலைக் காப்பதில் தமிழக அரசு தவறும் போது மக்களின் சுகாதாரத்தை அரசால் எப்படி சட்டப்படி பேணிகாக்க முடியும்? ஜனநாயக சக்திகள் விழித்துக் கொண்டு அரசிற்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே சிறிதளவாவது மாற்றம் ஏற்படும்.
மரு.வீ.புகழேந்தி.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்