Yellow Tea: பழரசம் போன்ற சுவை..! சருமம், இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் மஞ்சள் டீ பற்றி தெரியுமா?
Feb 08, 2024, 04:36 PM IST
மஞ்சள் நிற டீ இலைகளால் தயார் செய்யப்படும் மஞ்சள் டீ எண்ணற்ற உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. தேநீர் பிரியர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பி பருகக்கூடிய பானமாக இவை இருந்து வருகின்றன.
இந்த மஞ்சள் டீ சீனாவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இது ஒரு சுவையான தேநீராக இருப்பதுடன் இனிமையான நறுமணம், பருகிய பின் பழச்சாறு சாப்பிட்ட உணர்வை தரும். கிரீன் டீ போன்ற சுவை கொண்ட இந்த மஞ்சள் டீ, வயிற்றுக்கு எவ்வித தொந்தரவும் தராது. மஞ்சள் டீ பருகுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் டீ பெயர் காரணம் என்ன?
மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மட்டுமே இந்த பெயரில் அழைக்கப்படவில்லை. உலர்ந்த இலை அல்லது மூல பொருள்கள் உள்செலுத்தப்பட்ட முறை என்று இல்லாமல் காய்ச்சப்பட்ட கலவையின் சாயல் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகிறது. கடைசிகட்ட செயலாக்கத்தின்போது இலைகள் சரி செய்யப்பட்டு உருட்டப்பட்ட பிறகு, தேநீர் கட்டுப்படுத்தப்பட்ட ஆக்சிஜனேற்றம் மற்றும் ஈரப்பதம் சரிசெய்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட ஆக்சிஜனேற்றம் தான் மஞ்சள் தேயிலையை பச்சை தேயிலையிலிருந்து வேறுபடுத்துகிறது, தேநீர் இந்த ஆக்சிஜனேற்ற செயல்முறைக்கு உட்படும் போது, பானத்தின் நிறம் மஞ்சளாக மாறுகிறது. மஞ்சள் தேநீரில் ஆக்சிஜனேற்றம் அளவு பச்சை தேயிலையை விட அதிகமாக உள்ளது. அதேசமயம் பிளாக் டீயை விட குறைவாக உள்ளது
மஞ்சள் டீ பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்
அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
கேட்டசின், பாலிபினால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
இதயம் செயலிழப்பது, இதய நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. அழற்சிகளுக்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கும் மஞ்சள் டீ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆன்டிதெரோஜெனிக், ஆண்டிஹைபர்டென்ஷன் விளைவுகள் இதய பாதிப்பின் அபாயத்தை குறைக்கிறது.
எடையை சீராக வைக்க உதவுகிறது
மஞ்சள் தேநீரில் உள்ள காஃபின் மற்றும் கேட்டசின்களின் கலவையானது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை சீராக வைக்கப்படுகிறது.
காஃபின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. கேடசின்கள் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்துக்கு உதவி புரிகிறது
மனநிலையை மேம்படுத்துகிறது
மற்ற டீ வகைகளை போல் எல்-தியானைன் என்ற அமினோ அமிலத்தை கொண்டிருக்கும் மஞ்சள் தேநீர், மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸ் உணர்வை தருகிறது.
மஞ்சள் தேநீரில் இடம்பிடித்திருக்கும் மிதமான அளவு காஃபினுடன் எல்-தியானின் கலவையானது அமைதியான மற்றும் கவனத்தை செலுத்தும் மனநிலைக்கு பங்களிக்கும்
குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
மஞ்சள் தேநீரில் உள்ள டானின்கள் போன்ற கலவைகள், செரிமான பிரச்னைகளை ஆற்றுப்படுத்துகிறது.
பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மஞ்சள் தேநீரில் காணப்படும் பாலிபினால்கள் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டிருப்பதால், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சர்க்கரை சேர்க்காமல் இந்த தேநீர் அருந்துவது சிறந்த பல் சுகாதாரத்துக்கு பங்களிக்கும்
சருமத்துக்கு நன்மை
மஞ்சள் தேநீரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாப்ப்தாலும், கொலாஜன் உற்பத்தியை ஆதரிப்பதாலும் சருமத்துக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
மஞ்சள் தேயிலையின் நோயெதிர்ப்பு-அதிகரிக்கும் பண்புகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற உயிரியக்க சேர்மங்களின் இருப்பு உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு பங்களிக்கிறது.
டாபிக்ஸ்