தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரம்ஜான் நோன்பிருப்பவர்கள் சஹர் காலத்தில் சாப்பிட உகந்த உணவுகள்

ரம்ஜான் நோன்பிருப்பவர்கள் சஹர் காலத்தில் சாப்பிட உகந்த உணவுகள்

I Jayachandran HT Tamil

Mar 30, 2023, 10:32 PM IST

Healthy Food: ரம்ஜான் நோன்பிருப்பவர்கள் சஹர் காலத்தில் சாப்பிட உகந்த சில உணவுகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
Healthy Food: ரம்ஜான் நோன்பிருப்பவர்கள் சஹர் காலத்தில் சாப்பிட உகந்த சில உணவுகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

Healthy Food: ரம்ஜான் நோன்பிருப்பவர்கள் சஹர் காலத்தில் சாப்பிட உகந்த சில உணவுகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

சரியான கோடைக்காலத்தில் ரம்ஜான் நோன்பை மேற்கொள்வதால் உடலில் நீர்ச்சத்து குறையாமலும் தேவையான ஊட்டச்சத்துகளும் நிறைந்திருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Benefits of Masturbation : செக்ஸ்வல் ஆர்கஸம் மட்டுமல்ல; சுயஇன்பத்தால் உடலுக்கு எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்காதீர்கள்; மாறாக இதை செய்யுங்கள்!

Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது கடமையாகும். இந்த நோன்பு மிகவும் கடுமையானது. சூரிய உதிக்கும் போது நோன்பை திறந்து, சூரிய மறையும் போது நோன்பை முடிப்பார்கள். நோன்பு இருக்கும் சமயத்தில் சிறிதும் எச்சிலை விழுங்காமல், நீர் அருந்தாமல் கடுமையாக நோன்பு இருப்பார்கள்.

இந்த நோன்பு அவர்களது 5 கடமைகளில் மிகவும் முக்கியமான ஒன்று.

வெயில் கொளுத்தும் கோடைக்காலத்தில் இந்த நோன்பை மேற்கொள்வதால், அதிகப்படியான வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. அதுவும் இந்த நோன்பை மேற்கொண்டு, வேலைக்கு செல்பவர்கள் நோன்பு திறக்கும் முன் சாப்பிடும் சஹர் உணவின் போது ஒருசில உணவுகளை உண்பதன் மூலம், நோன்பு காலத்தில் அதிக தாகம் எடுப்பதைத் தவிர்க்கலாம். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

ஒரு கிண்ணம் தயிரில் 85% நீர்ச்சத்து உள்ளது. அத்துடன் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கால்சியம் போன்றவையும் உள்ளன. எனவே சஹர் காலத்தில் தயிரை உட்கொள்ளும் போது, அது உடலில் போதுமான நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

லெட்யூஸ் தற்போது சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படுகிறது. இந்த லெட்யூஸில் 95% நீர்ச்சத்து உள்ளது. எனவே இதை உண்ணும் போது உடல் போதுமான நீரேற்றத்துடன் இருக்கும். அதற்கு அந்த லெட்யூஸை பொரியலாக செய்து சாப்பிடலாம்.

வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது. இது தாகத்தைக் கட்டுப்படுத்தும். எனவே நோன்பு இருப்பவர்கள், சுகூர் உணவின் போது வெள்ளரிக்காயை நறுக்கி, தயிருடன் சேர்த்து சாப்பிட, தாகம் எடுப்பது தடுக்கப்படும்.

தர்பூசணியில் 92% நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால், நோன்பு இருப்பவர்கள் சுகூர் காலத்தில் தர்பூசணியை உட்கொள்வது நல்லது. இது சுவையானது மட்டுமின்றி, உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது மற்றும் இது தாகத்தைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும் நன்கு கனியாத வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை எதிர்விளைவையே ஏற்படுத்தும். அதாவது உடல் வறட்சியை இன்னும் அதிகரிக்கும். எனவே நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

தக்காளி ஜூஸில் சோடியம் மற்றும் நீர்ச்சத்து சரியான அளவில் இருப்பதால், இதை சஹர் காலத்தில் உட்கொள்ளும் போது, நாள் முழுவதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.

ஓட்ஸை பால் அல்லது நீர் சேர்த்து சாப்பிடும் போது, அது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, அதிக தாகம் எடுப்பதைத் தடுக்கும். அதோடு, ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும்.

அவகேடோ பழம் குளிர்ச்சியானது மட்டுன்றி, ஆரோக்கியமான கொழுப்புக்கள், கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றை அதிகளவு கொண்ட பழமும் கூட. முக்கியமாக இந்த பழத்தில் 60-70 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எனவே நோன்பு தொடங்கும் முன் அவகேடோ மில்க் ஷேக்கை குடியுங்கள்.

டாபிக்ஸ்