தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அவகேடோ பழங்களை நீங்கள் ஏன் அன்றாடம் சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாமா?

அவகேடோ பழங்களை நீங்கள் ஏன் அன்றாடம் சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாமா?

Priyadarshini R HT Tamil

Nov 15, 2024, 10:19 AM IST

google News
அவகேடோ பழங்களை நீங்கள் ஏன் அன்றாடம் சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அவகேடோ பழங்களை நீங்கள் ஏன் அன்றாடம் சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அவகேடோ பழங்களை நீங்கள் ஏன் அன்றாடம் சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் அவகேடோ பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இது உங்கள் உணவுக்கு கூடுதல் சுவையைத் தரும். இதை நீங்கள் பல்வேறு உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தனியாகவும் சாப்பிடலாம். இதன் சுவையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள்.

இதய ஆரோக்கியம்

அவகேடோக்களை நீங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் அது இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது. அதில் அதிகளவில் மேனோசாச்சுரேடட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் உள்ள ஆரோக்கியமற்ற எல்டிஎல் கொழுப்புக்களின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது. இது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது

அவகேடோவில், அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. 10 கிராம் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் செரிமான ஆரோக்கியத்தைத் தூண்டும். இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். இது உங்களுக்கு பசியைக் கட்டுப்படுத்தி, சாப்பிடவேண்டும் என்ற உணர்வைப் போக்குகிறது.

ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் திறன்

அவகேடோவில் உள்ள ஆரோக்கிய கொழுப்புகள், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே ஆகியவற்றை மற்ற உணவுகளில் இருந்து உறிஞ்சும் தன்மைகொண்டது. இதனால் அவை கழிவாகச் செல்லாது. இது உங்கள் உடல் அதிக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் அதிகரிக்கும்.

பொட்டாசிய சத்துக்கள் நிறைந்தது

அவகேடோவில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த தேவையான முக்கிய உட்பொருள் ஆகும். போதிய தசை செயல்பாடுகளையும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் இது அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடை மேலாண்மை

அவகேடோடக்களை நீங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால், அது உங்களின் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இதனால், நீங்கள் சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற ஆசையைக் குறைக்கிறது. இது அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துக்கள் அதிகம். ஆரோக்கிய கொழுப்புக்களும் நிறைந்தது.

பல்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம்

அவகேடோக்களை நீங்கள் பல்வேறு உணவுப்பொருட்களில் பயன்படுத்தலாம். ஸ்மூத்திகள், சாலட்கள் அல்லது பிரட் ஸ்பிரட்கள் செய்யலாம். இது உங்கள் உணவை கிரிமியாக்கும். இது உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும். இதனால் உங்களுக்கு உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

வைட்டமின் இ மற்றும் கரோட்டினாய்ட்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவகேடோவில் அதிகம் உள்ளது. இது உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்குகிறது. இதனால் உங்கள் உடலில் நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடி

அவகேடோவில் உள்ள ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் இரண்டும் சேர்ந்து, உங்கள் தலைமுடி மற்றும் சருமத்தின் நீர்ச்சத்தை அதிகரிக்கின்றன. இதனால் சருமத்தின் நெகிழ்தன்மை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியும் நடக்கிறது.

மூளையின் செயல்பாடு

அவகேடோவில் உள்ள மோனோஅன்சாச்சுரேடட் கொழுப்புகள், நினைவாற்றல் திறன்களை அதிகரிக்கச் செய்கிறது. இது நினைவாற்றலுக்கு உதவுகிறது. இதனால் உங்கள் மூளை ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உங்களுக்கு வயதாகும்போது ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

அவகேடோவில் ஃபைட்டோகெமிக்கல்கள் உள்ளன. அவை உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறுத. இது ஆர்த்ரிட்டிஸ், இதயநோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை