உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க வேண்டுமா? இதோ இந்த 9 நட்ஸ்களை ட்ரை பண்ணுங்க!
Dec 17, 2024, 12:01 PM IST
உங்கள் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க வேண்டுமெனில் நீங்கள் இந்த நட்ஸ்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உலர் பழங்கள் என்னவென்று பாருங்கள். உலர் பழங்கள் சுவையானவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். இதில் நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கிறது. நீங்கள் தினமும் சாப்பிட ஏற்ற, நல்ல கொழுப்புகள் நிறைந்த நட்ஸ்கள் இவைதான்.
பாதாம்
100 கிராம் பாதாமில் 33 கிராம் மோனோசாச்சுரேடட் கொழுப்பு அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இது ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதை உங்கள் சரிவிகித உணவில் எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடல் நலன் மேம்படுகிறது.
அத்திப்பழம்
அத்திப்பழத்தில் அதிகளவில் கொழுப்பு கிடையாது. அத்தியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான கொழுப்பு அளவையும் அதிகரிக்கிறது.
கொப்பரை தேங்காய்
100 கிராம் கொப்பரை தேங்காயில் 65 கிராம் கொழுப்பு உள்ளது. இது மீடியம் செயின் ட்ரைகிளிசரைட்கள் நிறைந்தது. இது உங்கள் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும். இதை நீங்கள் குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடலை
100 கிராம் கடலையில் 49 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் மோனோசாச்சுரேடட் கொழுப்புகள் அதிகம். இதில் நல்ல கொழுப்பு அளவுகள் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
பைன் நட்ஸ்கள்
100 கிராம் பைன் நட்ஸ்களில் 68 கிராம் கொழுப்புகள் உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ஹசல் நட்ஸ்கள்
100 கிராம் ஹசல் நட்ஸ்களில் 61 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் மோனோசாச்சுரேடட் கொழுப்பு அதிகம். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
முந்திரி
100 கிராம் முந்திரியில் 44 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் ஆரோக்கியமான மோனோ சாச்சுரேடட் கொழுப்புகள் உள்ளது. இது உங்கள் உடலில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பிஸ்தா
100 கிராம் பிஸ்தாவில் 45 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
வால்நட்ஸ்
100 கிராம் வால்நட்ஸில் 65 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம். இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது நல்ல கொழுப்பை உடலில் அதிகரித்து, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தின் நன்மைக்கும் வழிவகுக்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்