தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Village Mutton Gravy : கமகமவென வீடே மணக்கும் கிராமத்து கறிக்குழம்பு! சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம்!

Village Mutton Gravy : கமகமவென வீடே மணக்கும் கிராமத்து கறிக்குழம்பு! சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம்!

Priyadarshini R HT Tamil

Jan 29, 2024, 07:00 AM IST

google News
Village Mutton Gravy : கமகமவென வீடே மணக்கும் கிராமத்து கறிக்குழம்பு! சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம்! (Yummy Tummy)
Village Mutton Gravy : கமகமவென வீடே மணக்கும் கிராமத்து கறிக்குழம்பு! சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம்!

Village Mutton Gravy : கமகமவென வீடே மணக்கும் கிராமத்து கறிக்குழம்பு! சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம்!

தேவையான பொருட்கள்

ஆட்டுகறி – முக்கால் கிலோ

சின்ன வெங்காயம் – கால் கிலோ

வர மல்லி விதை – 100 கிராம்

காய்ந்த மிளகாய் – 15

தேங்காய் துருவல் – ஒரு கப்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 10 பல்

இஞ்சி – விரல் நீள துண்டு

நல்லெண்ணெய் – 100 மில்லி லிட்டர்

உப்பு – தேவையான அளவு

சோம்பு – ஒரு ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

ஸ்டார் சோம்பு – 2

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள் 

கரம் மசாலா - கால் ஸ்பூன் 

கறிவேப்பிலை - ஒரு கொத்து 

மல்லித்தழை - ஒரு கைப்பிடி 

செய்முறை –

கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் மல்லி, மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவேண்டும்.

பின்னர் அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தையும் வதக்கி அதையும் அரைத்து கொள்ளவேண்டும்.

சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஸ்டார் சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் கறியை போட்டு நன்கு வதக்கி கறி வேக தேவைாயன அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவேண்டும்.

அதனுடன் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த மல்லி-மிளகாய் விழுது, அரைத்த சின்ன வெங்காய விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கறியை நன்றாக வேக விடவேண்டும்.

கறி வெந்தவுடன், அரைத்த தேங்காய் விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக தளதளவென கொதிக்கவிடவேண்டும்.

மசாலா பச்சை வாசம் போனவுடன் இறக்கவேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, கரம் மசாலா, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்தால் கமகமவென மணக்கும் கிராமத்து ஆட்டுகறி குழம்பு தயார்.

சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். மிளகாய் அளவை உங்கள் கார அளவுக்கு ஏற்ப குறைத்தோ அல்லது அதிகரித்தோ கொள்ளலாம்.

இதை இட்லி, தோசை, பூரி சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி