தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vellai Appam: செட்டி நாடு ஸ்பெஷல் வெள்ளை அப்பம்.. இப்படி செஞ்சு பாருங்க!

Vellai Appam: செட்டி நாடு ஸ்பெஷல் வெள்ளை அப்பம்.. இப்படி செஞ்சு பாருங்க!

Oct 03, 2023, 09:32 AM IST

google News
இதே மாவில் கடுகு உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், ஆகியவற்றை தாளிப்பாக சேர்த்தும் இந்த அப்பத்தை ஊற்றலாம்.
இதே மாவில் கடுகு உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், ஆகியவற்றை தாளிப்பாக சேர்த்தும் இந்த அப்பத்தை ஊற்றலாம்.

இதே மாவில் கடுகு உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், ஆகியவற்றை தாளிப்பாக சேர்த்தும் இந்த அப்பத்தை ஊற்றலாம்.

பொதுவாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு உணவு உள்ளது. அப்படி சைவம் மற்றும் அசைவத்தில் செட்டி நாட்டு ஸ்பெஷல் என பல வகையான உணவுகள் உள்ளது. அப்படியான ஒரு  செட்டிநாடு உணவுகளில் ஒரு சிக்னேச்சர் ரெசிப்பியாக பார்க்கப்படுவதுதான் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் வெள்ளை அப்பம்.  தொடர்ச்சியாக இட்லி தோசை என சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி அப்பம் செய்து பார்க்கலாம். இது மிகவும் ருசியாக இருக்கும் உங்கள் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

தேவையான பொருட்கள்

பச்சரிசி

உளுந்து

தேங்காய்

உப்பு

பேக்கிங் சோடா

எண்ணெய்

செய்முறை

ஒரு கப் பச்சரியை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும். அதில் இரண்டரை டேபிள் ஸ்பூன் உளுந்தையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அரிசி பருப்பு 2 மணி நேரம் ஊறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சம் பேக்கிங் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கொள்ள வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் மாவு அரைக்கும் போது நன்றாக அரைத்து வடிகட்டிய தேங்காய் பாலை சேர்த்து மாவு அரைத்துக் கொள்ளலாம்.

இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் அரைத்த மாவை மெதுவாக விட்டு அப்பமாக ஊற்ற வேண்டும். அது சிறிது நேரம் கழித்து அப்பம் மேலே வரும் போது திருப்பி விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளலாம். இந்த அப்பத்திற்கு காரச்சட்னி சரியான காமினேஷன்

குறிப்பு: இதே மாவில் கடுகு உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், ஆகியவற்றை தாளிப்பாக சேர்த்தும் இந்த அப்பத்தை ஊற்றலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி