தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vathal Kulambu Podi : இந்தப்பொடிய சேர்த்து செய்து பாருங்க உங்க வீட்டு வத்தக்குழம்பு சுவையை! தெருவே மணக்கும்!

Vathal Kulambu Podi : இந்தப்பொடிய சேர்த்து செய்து பாருங்க உங்க வீட்டு வத்தக்குழம்பு சுவையை! தெருவே மணக்கும்!

Priyadarshini R HT Tamil

Nov 18, 2023, 12:01 PM IST

google News
Vathal Kulambu Podi : இந்தப்பொடியை சேர்த்து செய்து பாருங்கள். உங்க வீட்டு வத்தக்குழம்பு சுவையை, தெருவே மணக்கும். நாவூறும்.
Vathal Kulambu Podi : இந்தப்பொடியை சேர்த்து செய்து பாருங்கள். உங்க வீட்டு வத்தக்குழம்பு சுவையை, தெருவே மணக்கும். நாவூறும்.

Vathal Kulambu Podi : இந்தப்பொடியை சேர்த்து செய்து பாருங்கள். உங்க வீட்டு வத்தக்குழம்பு சுவையை, தெருவே மணக்கும். நாவூறும்.

வத்தக்குழம்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்

வர மல்லி – ஒரு கப்

கடலை பருப்பு – அரை கப்

துவரம் பருப்பு – கால் கப்

வர மிளகாய் – 20

வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

புளி – ஒரு கப்

கடுகு – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 4 கொத்து

சுண்டைக்காய் வத்தல் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

ஒரு கப் வர மல்லியை கடாயில் சேர்த்து நன்றாக பொரிந்து வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அதையும் எடுத்து வைத்துவிட்டு, வர மிளகாயை சேர்த்து சூடாகும் வரை வறுத்து எடுத்து வைத்துவிடவேண்டும்.

வெந்தயம், மிளகு இரண்டையும் சேர்த்து வாசம் வரும்வரை எடுத்து தனியாக வைத்து விடவேண்டும்.

பின்னர் புளியையும் வறுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறியவுடன், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை, சுண்டைக்காய் வத்தல் மற்றும் கடுகு ஆகிய அனைத்தையும் நன்றாக வறுத்து, இந்த பொடியில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வத்தல் குழம்பு செய்யும்போது இந்தப்பொடியை இரண்டு ஸ்பூன் சேர்த்து செய்தால் தெருவே மணக்கும், சுவையான வத்தல் குழம்பு தயார். இது கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் வத்தல் குழம்புபோல் சுவையாக இருக்கும்.

இந்த வத்தல் குழம்பை சூடான சாதத்தில், நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு வடகம், சுட்ட அப்பளம் செம்ம காம்போ. எனினும் பாசிபருப்பு சேர்த்து செய்த காயும் நன்றாக இருக்கும். வெள்ளரிக்காய் கூட்டு, சேர்த்துக்கொள்ள சுவை அள்ளும்.

பொதுவாக காரமாக இருக்கும் வத்தல் குழம்பை சிலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்தப்பொடியை சேர்த்து செய்யும்போது, வத்தல் குழம்பையும் விரும்பி சாப்பிடுவார்கள்.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி