தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tips For Good Sleep: இரவில் தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள்? இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

Tips for Good Sleep: இரவில் தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள்? இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

Suguna Devi P HT Tamil

Sep 22, 2024, 09:37 AM IST

google News
Tips for Good Sleep: அதிகமான டிஜிட்டல் சாதன உபயோகத்தாலும் சரிவர தூக்கம் வருவதில்லை. உலகளாவிய அளவில் தூக்கமின்மை பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. காரணம் பெரும்பானமாயன மக்கள் தூக்கமின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tips for Good Sleep: அதிகமான டிஜிட்டல் சாதன உபயோகத்தாலும் சரிவர தூக்கம் வருவதில்லை. உலகளாவிய அளவில் தூக்கமின்மை பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. காரணம் பெரும்பானமாயன மக்கள் தூக்கமின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tips for Good Sleep: அதிகமான டிஜிட்டல் சாதன உபயோகத்தாலும் சரிவர தூக்கம் வருவதில்லை. உலகளாவிய அளவில் தூக்கமின்மை பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. காரணம் பெரும்பானமாயன மக்கள் தூக்கமின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக மயமாதல், இயற்கை மாற்றங்கள் ஆகிய காரணிகளால் உலகத்தின் சூழ்நிலைகள் மட்டும் மாறி வர வில்லை. மனிதர்களின் வாழ்வியல் முறைகளும் மாறி வருகின்றன. மக்களும் அவர்கள் செய்யும் வேலை, குடும்ப பிரச்சனைகள், அன்றாடம் மேற்கொள்ளும் பயணம் என பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான டிஜிட்டல் சாதன உபயோகத்தாலும் சரிவர தூக்கம் வருவதில்லை. உலகளாவிய அளவில் தூக்கமின்மை பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. காரணம் பெரும்பானமாயன மக்கள் தூக்கமின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தூக்கமின்மையில் இருந்த விடுபட வேண்டுமா! இதோ சில வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால் போதும். 

நிம்மதியான தூக்கத்திற்கான வழிமுறைகள் 

தூக்கத்திற்கான அட்டவணை: ஒரு வாரத்தில் உள்ள ஏழு நாட்களும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். எந்த நாளும் அந்த நேரத்தை தாண்டி முழித்திருக்க முயற்சி செய்ய கூடாது. இவ்வாறு செய்வதன் வழியாக தானாகவே தூக்கம் வருமாறு அதான் சூழற்சியை ஒழுங்கப்படுத்த முடியும்.  

டிஜிட்டல் சாதனங்களை தவிர்த்தல்: தினம் தோறும் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே டிஜிட்டல் சாதங்களான மொபைல், டிவி, கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் இருந்து வரும் புளூ ரேஸ் எனும் கதிர்கள் இயற்கையாக வரும் தூக்கத்தை மட்டுபடுத்துகின்றன. 

தூங்கும் முன்பு ஓய்வு: தூங்குவதற்கு செல்லும் முன்பு சில மணி நேரங்கள், புத்தகங்கள் படிப்பது, இனிமையான இசையை கேட்பது ஆகியவற்றை வழக்கமாக மாற்றுங்கள். மேலும் யோகா அல்லது தியானம் செய்து மனதை ஒரு நிலை படுத்த வேண்டும். 

 தூங்கும் முன் ஹெவி டின்னர்: இரவு நேரங்களில் மிகவும் சத்து மிக்க அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இவை இரண்டும் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கலாம். 

 காபி மற்றும் ஆல்கஹால்: தூங்குவதற்கு நான்கு மணி நேரத்தில் இருந்து ஆறு மணி நேரம் முன்பில் இருந்தே காபி , டீ, ஆல்கஹால் என எதுவும் குடிக்க கூடாது. 

உடற்பயிற்சி அவசியம்: ஒரு நாளில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

பெட்ரூம் வெப்பநிலை: நீங்கள் தூங்கும் அறையின் வெப்பநிலையை சீராகவும், தூங்குவதற்கு ஏற்ற வகையில் ஏசி வெப்பநிலையை குறைத்து வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் கூடுதலாக பகல் நேரங்களில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்க்கு ஏற்ற பெட்களை பயன்படுதவும். 

 மருத்துவரை அணுகுங்கள் 

தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு, மெடிக்கல் கடைகளி விற்கப்படும் தூக்க மாத்திரைகளை வாங்கி பயன்படுத்த கூடாது. இதற்கு ஏற்ற மருத்துவரை அணுகி இதற்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும். குறிப்பாக இன்றைய சூழ் நிலையில் தற்காலிக தீர்வை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். நிரந்தர தீர்வை நோக்கி செயல் பட வேண்டும். 

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த தூக்கமின்மை பிரச்சனை இருந்தது. ஆனால் வாழ்க்கை முறைகளால் இன்றைய இளைய சமுதாயத்தினரும் இந்த பிரச்சனையால் அவதி பத்து வருகின்றனர். வேலை பளு, பொருளாதார நெருக்கடி, உட்பட பல இதற்கு காரணமாகும்.  

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி