தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Jowar: வயிற்றுக்கு எந்த தொந்தரவும் கிடையாது - சோளம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பாருங்க

Benefits of Jowar: வயிற்றுக்கு எந்த தொந்தரவும் கிடையாது - சோளம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பாருங்க

May 01, 2024, 05:59 PM IST

google News
இதய ஆரோக்கியம், எலும்புகளை வலுப்படுத்துதல், எடை குறைப்பு, செரிமான பிரச்னை என பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட உணவாக சோளம் இருந்து வருகிறது. சோளத்தில் இருக்கும் சத்துக்கள் அவற்றால் பெறும் ஆரோக்கிய நன்மைகளையும் பார்க்கலாம்.
இதய ஆரோக்கியம், எலும்புகளை வலுப்படுத்துதல், எடை குறைப்பு, செரிமான பிரச்னை என பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட உணவாக சோளம் இருந்து வருகிறது. சோளத்தில் இருக்கும் சத்துக்கள் அவற்றால் பெறும் ஆரோக்கிய நன்மைகளையும் பார்க்கலாம்.

இதய ஆரோக்கியம், எலும்புகளை வலுப்படுத்துதல், எடை குறைப்பு, செரிமான பிரச்னை என பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட உணவாக சோளம் இருந்து வருகிறது. சோளத்தில் இருக்கும் சத்துக்கள் அவற்றால் பெறும் ஆரோக்கிய நன்மைகளையும் பார்க்கலாம்.

கோதுமை உணவுகள் போல் ஆரோக்கியம் நிறைந்த மாற்று உணவாக சோளம் இருந்து வருகிறது. வழக்கமான தானிய வகை உணவுகளில் இருந்து மாற்றாக அமையும் இந்த சோளம் சார்ந்த உணவுகளில் அதிக நார்ச்சத்து நிறைந்திருப்பதோடு, குளூட்டன் இல்லாத உணவாக உள்ளது.

பிட்னஸ் மீது அக்கறை செலுத்துபவர்கள் மத்தியில் மிகப் பிரபலமான உணவாக மாறி வருகிறது சோளம் சார்ந்த உணவுகள். அதிக அளவிலான நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், மைக்ரோ ஊட்டச்சத்துகள் போன்றவை நிரம்பி இருப்பதால், இந்த தினை வகை உணவில் இருக்கும் உடல்நல ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. இதயத்துக்கு நன்மை தரும் இவை, ரத்த சர்க்கரை அளவ, வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

பல்வேறு வகையான சிறு தானிய வகைகளில் அதிகபேரால் சாப்பிடக்கூடிய உணவாக சோளம் இருந்து வருகிறது. வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடிய தானிய வகையாக சோளம் இருந்து வருகிறது. 

சோளத்தின் நன்மைகள்

சோளம் அதிக அளவில் புரதம், தாமிரம் இரும்பு சத்துக்களை கொண்டுள்ளது. இவை சோளம் உயிரணுக்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் கொழுப்பை குறைக்கவும் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்யவும் உதவுகிறது

செரிமானத்துக்கு நன்மை

சோளம் சார்ந்த உணவுகள் கோதுமையை காட்டிலும் மிக எளிதாக செரிமானம் அடைகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, செரிமானம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

சோளத்தில் குளூட்டன் இல்லாமல் இருப்பதால் உடலின் கபம் மற்றும் பித்தத்தை சமநிலை அடைய செய்கிறது. அதேபோல் வதம் தொடர்பான தோஷங்களை அதிகரிக்கிறதுய

அத்துடன் கோதுமையில் உள்ள புரதத்தை காட்டிலும் சோளத்தில்இருக்கும் புரதம் சிறப்பானதாக உள்ளது.  பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால்  மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. வயிற்றுக்கும் எவ்வித தொந்தரவும் ஏற்படுத்ததாது 

எலும்புகளை வலிமை, எடைகுறைப்பு 

சோளத்தில் கணிசமான அளவில் கால்சியம் இருப்பதால் அதில் தயாரான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களது எலும்புகள் வலுபெறும்

சோளத்தில் உள்ள அதிகமான நார்ச்சத்து, எடைக் குறைப்பு பணியை எளிமையாக்குகிறது. வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தடுக்கிறது

இதய ஆரோக்கியம்

சோளம் உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாக உள்ளது. இது எல்டிஎல் எனப்படும் குறைவான அடர்த்தி லிப்போ புரதத்தை குறைத்து, எச்டிஎல் எனப்படும் அதிக அடர்த்தி லிப்போ புரதத்தை மேம்படுத்திகிறது. எச்டிஎல்-ஆனது உடலுக்கு தேவைப்படும் நல்ல கொலஸ்ட்ராலாக உள்ளது. அத்துடன் உடலின் ஆற்றல் அளவையும் பராமரிக்கிறது

சோளம் சாப்பிடுவதனால் உங்களது ரத்த ஓட்டமானது மேம்படுவதோடு, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் செய்கிறது. தோல் சார்ந்த கோளாறுகளுக்கு சிறந்த உணவாக சோளம் உள்ளது

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது

சர்க்கரையைக் குறைக்கும் தன்மை கொண்டதாக சோளம் உள்ளது. இவை இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

சோளம் உணவுகள்

சோளத்தை வைத்து ரொட்டி, இட்லி, தோசை, கேக், கஞ்சி, கூக்கிகள், பிரட், உப்புமா, அப்பம், லட்டு, பனியாரம், கொழுக்கட்டை என பல வகைகளில் தயார் செய்து உணவாக சாப்பிடலாம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி