தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Diabetes: கருவுறுதலை சிக்கல்படுத்தும் நீரிழிவு நோய்: சமாளிக்கும் வழிகள்

Diabetes: கருவுறுதலை சிக்கல்படுத்தும் நீரிழிவு நோய்: சமாளிக்கும் வழிகள்

Marimuthu M HT Tamil

Jan 06, 2024, 04:16 PM IST

google News
கருவுறாமை மற்றும் நீரிழிவு நோயை ஒன்றாகச் சமாளிப்பதற்கான டிப்ஸ்களைக் காண்போம்.
கருவுறாமை மற்றும் நீரிழிவு நோயை ஒன்றாகச் சமாளிப்பதற்கான டிப்ஸ்களைக் காண்போம்.

கருவுறாமை மற்றும் நீரிழிவு நோயை ஒன்றாகச் சமாளிப்பதற்கான டிப்ஸ்களைக் காண்போம்.

இளைஞர்கள் சிலருக்கு கட்டுப்பாடற்று இருக்கும் சர்க்கரை நோயால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகிறது. எனவே, வெற்றிகரமான கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்க நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிப்பது முக்கியம். நீரிழிவு நோயினால் ஏற்படும் ஹார்மோன்களின் சீர்குலைவு, கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கிறது. ஏனெனில் நீரிழிவு நோயானது விந்தணுக்கள், முட்டைகள் மற்றும் கருக்களின் தரத்தை குறைக்கிறது. அதே நேரத்தில் டிஎன்ஏ கட்டமைப்பையும் சேதப்படுத்துகிறது. இறுதியில் மரபணு மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

பெண் கருவுறுதலில் நீரிழிவு நோயின் தாக்கம்:

புனேவில் உள்ள அங்குரா மருத்துவமனையின் ஆலோசகர் மற்றும் கருவுறுதல் நிபுணரான டாக்டர் ஆர்த்தி ராபோல் அளித்த பேட்டியில், "ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் திறனைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளில், நீரிழிவு நோய் முக்கியப் பங்கினை வகிக்கிறது. நீரிழிவு வகை 1 மற்றும் வகை 2 வடிவில் உள்ளது. ஒருவருக்கு நீரிழிவு வகை 1 நோய் இருந்தால், உடல் சர்க்கரை வளர்சிதை மாற்றத்திற்கு போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யத் தவறிவிடுகிறது. இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. 

நீரிழிவு வகை 2 நோயாளிகளுக்கு சாதாரண அளவு இன்சுலின் உற்பத்தி ஆகிறது. ஆனால்,  சர்க்கரை வளர்சிதை மாற்ற நோக்கங்களுக்காக அதிக இன்சுலின் தேவைப்படுகிறது. கூடுதலாக, கர்ப்பகால நீரிழிவு நோய் என்பது ஒரு தற்காலிக வகை நீரிழிவு நோயைக் குறிக்கிறது. இது கர்ப்ப காலத்தில் உருவாகிறது. ஆனால் பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும்.

ஆரம்ப கட்டத்தில் அதிக இரத்த சர்க்கரை கொண்ட கர்ப்பிணிப் பெண்கள், பிறவி முரண்பாடுகள் மற்றும் கருச்சிதைவுகள் உள்ளிட்ட சிக்கல்கள் மற்றும் சிரமங்களை அனுபவிக்கும் அபாயத்தில் உள்ளனர். 

கூடுதலாக, கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிற்கால வாழ்க்கையில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் அடுத்தடுத்த கர்ப்பங்களில் நீரிழிவு நோயை உருவாக்கும் அதிக ஆபத்து உள்ளது. கர்ப்பத்தின் பிற்பகுதியில் உயர் இரத்த அழுத்தத்தைப் பெறுவதற்கான இரு மடங்கு அபாயத்தையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர்" என்றார்.

ஆண்களின் கருவுறுதலில் நீரிழிவு நோயின் தாக்கம்

டாக்டர் ஆர்த்தி ராபோல் இதுகுறித்து மேலும் கூறுகையில், “நீரிழிவு உள்ள ஆண்கள் குழந்தைக்கு முயற்சிக்கும்போது சிரமங்களை சந்திக்க நேரிடும். நீரிழிவு ஆண்களின் கருவுறுதலை பல்வேறு வழிகளில் பாதிக்கலாம். அதாவது விந்தணுக்களின் தரத்தை குறைத்தல், விறைப்புத்தன்மை மற்றும் விந்துதள்ளல் செயலிழப்பை ஏற்படுத்துதல் மற்றும் அசாதாரண விந்தணுக்களை ஏற்படுத்துதல் போன்றவற்றை உருவாக்கும்’’ என்றார்.

கருவுறுதல் சிக்கல்களைத் தடுக்க நீரிழிவு நோயை எவ்வாறு திறம்பட நிர்வகிக்க முடியும்?

டாக்டர் ஆர்த்தி ராபோல் கூறுகையில், "நீரிழிவு நோயினை நிலையான கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்த முடியும். சத்தான உணவைப் பேணுதல், புகைபிடிப்பதை நிறுத்துதல், மன அழுத்தமில்லாமல் இருப்பது மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் ஆகியவை முக்கியமான காரணிகள். உங்களுக்கு மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், பொருத்தமான மருத்துவ நிபுணரை அணுகவும் 

மலட்டுத்தன்மையும் நீரிழிவு நோயும் இப்படித்தான்:

டாக்டர் ஆர்த்தி ராபோல் மேலும் கூறுகையில் “நீரிழிவு காரணமாக நீங்கள் கருத்தரிக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF) ஒரு சாத்தியமான விருப்பமாக இருக்கலாம். IVF நிபுணர்கள் சரியான சிகிச்சை திட்டத்தின் மூலம் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். பெண் மலட்டுத்தன்மைக்கு, நோயறிதலின் அடிப்படையில் இன்-விட்ரோ கருத்தரித்தல் அல்லது கருப்பையக கருவூட்டல் செய்யப்படலாம். 

இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் என்னும் விந்தணு ஊசி (ICSI) செலுத்தி குறைந்த விந்தணு எண்ணிக்கை, இயக்கம் கொண்ட ஆண் மலட்டுத்தன்மைக்கும், அதே போல் குறைந்த எண்ணிக்கையிலான முட்டைகளுடன் கூடிய பெண் மலட்டுத்தன்மைக்கும் நன்மை பயக்கும்’’ என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை