தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Flax Seeds Laddu: தினமும் ஒரு லட்டு சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.. ருசியான ஆளி விதை லட்டு!

Flax Seeds Laddu: தினமும் ஒரு லட்டு சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.. ருசியான ஆளி விதை லட்டு!

Feb 27, 2024, 07:52 AM IST

google News
ஆனால் பலருக்கு ஆளி விதைகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அப்படி இருந்தா நீங்கள் ஆளி விதையை வைத்து இப்படி லட்டு செய்து பாருங்கள். (Pixabay)
ஆனால் பலருக்கு ஆளி விதைகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அப்படி இருந்தா நீங்கள் ஆளி விதையை வைத்து இப்படி லட்டு செய்து பாருங்கள்.

ஆனால் பலருக்கு ஆளி விதைகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அப்படி இருந்தா நீங்கள் ஆளி விதையை வைத்து இப்படி லட்டு செய்து பாருங்கள்.

ஆளி விதையில் ஒமேகா த்ரீ கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் அவற்றை கண்டிப்பாக சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆளி விதை எலும்புகளை பலப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது. இது முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. சருமத்தை பொலிவாக்கும். அதனால்தான் ஆளி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. 

ஆனால் பலருக்கு ஆளி விதைகளை என்ன செய்வது என்று தெரியவில்லை.  இதனால் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அப்படி இருந்தா நீங்கள் ஆளி விதையை வைத்து இப்படி லட்டு செய்து பாருங்கள். இவை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஆளிவிதை லட்டு செய்முறையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஆளிவிதை லட்டு ரெசிபிக்கு தேவையான பொருட்கள்

ஆளி விதைகள் - ஒரு கப்

கடலைப்பருப்பு - அரை கப்

ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்

துருவிய வெல்லம் - ஒரு கப்

உலர் பழங்கள் - தேவையான அளவு

நெய் - மூன்று ஸ்பூன்

எள் - ஒரு ஸ்பூன்

தேங்காய்த் தூள் - அரை கப்

கோதுமை மாவு - அரை கப்

செய்முறை

1. முதலில் ஆளி விதைகளை ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து வறுக்கவும். மிதமா தீயில் அடுப்பு இருக்க வேண்டும். ஆளிவிதை வறுத்த பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

2. அதே கடாயில் நிலக்கடலைத் துண்டுகளைச் சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து கொள்ள வேண்டும்.

3. பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் எள் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

4. இப்போது கடாயில் நெய் சேர்த்து கோதுமை மாவை வறுக்கவும். வறுத்த கோதுமை மாவை எடுத்து தனியாக வைக்கவும்.

5. இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த நிலக்கடலை, தேங்காய்த் தூள், கோதுமை மாவுடன் ஆளி விதை சேர்த்து அரைக்க வேண்டும்.

6. பிறகு துருவிய வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும்.

7. இப்போது இந்தக் கலவையை ஒரு தட்டில் போட்டு, அதில் பொரித்த உலர் பழங்களைச் சேர்க்கவும்.

8. மேலும் வறுத்த எள் சேர்த்து கலக்கவும்.

9. இப்போது உங்கள் கைகளில் நெய் தடவி, இந்த கலவையை லட்டுகளாக உருட்டவும்.

10. விரும்பினால் இந்தக் கலவையில் மேலும் கொஞ்சம் நெய்யை சூடாக்கி சேர்க்கலாம். அவ்வளவுதான், ஆளி விதை லட்டு தயார். இவை மிகவும் சுவையாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆளி விதைகளால் செய்யப்பட்ட உணவை உண்பதால் உடலில் கொலஸ்ட்ரால் சேர்வது தடுக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் சேர்க்கவில்லை என்றால் இதய பிரச்சனைகள் வராது. புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் ஆளி விதைகளுக்கு உண்டு. மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆளி விதைகளால் செய்யப்பட்ட உணவை சாப்பிட வேண்டும். ஆளி விதைகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அவை எடை இழப்புக்கு உதவுகின்றன.

இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு லட்டு சாப்பிட்டால் நிறைவான உணர்வு கிடைக்கும். எடை இழப்பு பயணத்தின் போது உங்கள் மெனுவில் ஆளி விதைகளைச் சேர்க்கவும். இது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. தினமும் மாலை குழந்தைகளுக்கு ஆளி விதைகளால் செய்யப்பட்ட லட்டுகளை ஊட்டுவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அவர்களின் மூளைக்கு சக்தி அளிக்கிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி