Pineapple Kesari: பார்த்தாலே தித்திக்கும் பைன் ஆப்பிள் கேசரி.. அடி நாக்கில் ருசிக்கும்!
Nov 30, 2023, 12:14 PM IST
ருசியான பைன் ஆப்பிள் கேசரியை ஒரு முறை செய்து தந்தால் உங்கள் வீட்டில் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்.
ருசியான பைன் ஆப்பிள் கேசரியை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். மணல் மணலாய் நாக்கில் வைத்த உடனே தித்திக்கும்.
தேவையான பொருட்கள்
அண்ணாச்சி பழம்
நெய் நெய்
முந்திரிப் பருப்பு
உலர் திராட்சை
குங்குமப்பூ
ரவை
உப்பு
கடலை எண்ணெய்
ஏலக்காய்
செய்முறை
ஒரு கப் ரவைக்கு அரை கப் நெய் அரை கப் கடலை எண்ணெய்யை எடுத்து கொள்ள வேண்டும். இதை அடி கனமான ஒரு கடாயில் ஊற்றி சூடாக்க வேண்டும். நெய்யும் கடலை எண்ணெய்யும் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் கரைய தொடங்கியதும் அதில் பாதியை மீண்டும் அதே கப்பில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலியில் 100 கிராம் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை இரண்டையும் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். முந்திரி நிறம் மாறி சிவக்க ஆரம்பிக்கும் போது அதில் ஒரு கப் ரவையையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். குறைந்தது 5 நிமிடம் நெய்யில் அந்த ரவையை வறுக்க வேண்டும். இப்போது அதில் 2 கிராம் அளவிற்கு குங்குமப்பூவை சேர்த்து கொள்ள வேண்டும். குங்குமப்பூ சேர்க்க விரும்பாவிட்டால் கேசரி கலர் பவுடரை சேர்த்து கொள்ளலாம்.
அதையும் சேர்த்து ரவையை நன்றாக வறுக்க வேண்டும். கடைசியாக 100 கிராம் அளவிற்கு பைன் ஆப்பிளை குட்டி குட்டி துண்டுகளாக வெட்டி சேர்த்து கொள்ளலாம். எந்த கப்பில் ரவை எடுத்தோமோ அதே கப்பில் கொஞ்சம் குறைவாக சர்க்கரையையும் சேர்த்து கலந்து விட வேண்டும். சர்க்கரை உருக ஆரம்பிக்கும் போது 2 கப் சூடான தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து கலந்து விட வேண்டும். கடைசியாக 4 ஏலக்காயை தட்டி சேர்த்து மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். கடைசியாக ஏற்கனவே சூடாக்கி எடுத்து வைத்து எண்ணெய் நெய்யை சேத்து கடாயை மூடி விட வேண்டும். 5 நிமிடம் கழித்து திறந்து நன்றாக கலந்து விட்டால் ருசியான பைன் ஆப்பிள் கேசரி ரெடி.
இந்த கேசரியை ஒரு முறை செய்து தந்தால் உங்கள் வீட்டில் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்