ருசியான இன்ஸ்டன்ட் சோயா சுக்கா
Feb 21, 2023, 09:44 PM IST
ருசியான இன்ஸ்டன்ட் சோயா சுக்கா செய்முறை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
ருசியான இன்ஸ்டன்ட் சோயா சுக்கா செய்ய தேவையான பொருட்கள்-
சோயாசங்ஸ்-2 கப்
மிளகாய் பொடி- 1 ஸ்பூன்
மல்லிப்பொடி- 1ஸ்பூன்
கரம்மசாலா- அரைஸ்பூன்
உப்பு- தேவைக்கு
சீரகத்தூள்- அரைஸ்பூன்
கார்ன்பிளவர்- 2ஸ்பூன்
தயிர்- 3ஸ்பூன்
இஞ்சி,பூண்டுதட்டியது-1ஸ்பூன்
சமையல்எண்ணெய்- தேவைக்கு
முந்திரிபருப்பு -10
கருவேப்பிலை- 1 கொத்து
ருசியான இன்ஸ்டன்ட் சோயா சுக்கா செய்முறை-
ஸ்டெப் 1
முதலில்சோயாவைசாதாதண்ணீரில்சுத்தம் பண்ணிக்கொள்ளவும்.பின்வேறுபாத்திரத்தில் தண்ணீர்வைத்து சோயாவை அதில் போட்டு வேகவைக்கவும்.பின் அதை வடிதட்டில்போட்டு வடிகட்டிக் கொள்ளவும்.வேறு பாத்திரத்தில் மிளகாய்பொடி,கரம்மசாலா, மல்லிப்பொடி,சீரகப்பொடி, உப்புசேர்த்து கலந்து விடவும்.தயிரையும் சேர்க்கவும். கார்ன்பிளவரையும் சேர்க்கவும்.
ஸ்டெப் 2
அதில்வேகவைத்த சோயாவைசேர்த்து நன்கு கலந்து விடவும்.இஞ்சி,பூண்டு தட்டிபோடவும்.கொஞ்சம் நேரம் ஊறவிடவும்.பின் ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் மசாலாகலந்த சோயாவை போட்டுவறுக்கவும். மிதமான சூட்டில்வேகவிடவும்.நன்குபொன்னிறமானதும் தனியாக எடுத்துவைக்கவும்.
ஸ்டெப் 3
பின் இதில் முந்திரி, கருவேப்பிலை வறுத்து சேர்க்கவும்.பார்க்க அருமையாக இருக்கும்.சோயா சுக்காரெடி.குழந்தைமுதல் பெரியவர்கள்வரை அனைவரும் சும்மாவே சாப்பிட்டு விடலாம்.பிரியாணி ,புலாவ், சீரகrice,சாம்பார் சாதத்துக்கு நல்ல காம்பினேசன்..சுவைத்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்