Sleep Problem : இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? இதோ இந்த பாலை மட்டும் இரவில் அருந்துங்கள் போதும்!
Mar 23, 2024, 01:15 PM IST
Sleep Problem: இரவில் உறக்கத்தை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
தேவையான பொருட்கள்
நீர்த்த பசும்பால் – ஒரு டம்ளர்
ஜாவித்திரி அல்லது ஜாதிபத்திரி பொடி – 2 சிட்டிகை
பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்
செய்முறை
நன்றாக காய்ச்சிய நீர்த்த பசும்பாலில் 2 சிட்டிகை ஜாதிபத்திரி பொடி மற்றும் பனங்கற்கண்டை சேர்த்து கலந்து இரவு உறங்கச் செல்லும் முன் பருக வேண்டும்.
அவ்வாறு பருகினால், இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும். இரவில் நன்றாக உறங்கினாலே போதும் ரத்தக்கொதிப்பு கட்டுப்படும்.
ஜாவித்திரி அல்லது ஜாதிபத்திரியில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்
100 கிராம் ஜாவித்திரியில் 174 சதவீம் காப்பர் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. ஜாவித்திரியில் 475 கலோரிகள் உள்ளன. 32.28 கிராம் கொழுப்பு, 80 மில்லி கிராம் சோடியம், 463 மில்லி கிராம் பொட்டாசியம், 50.50 கிராம் கார்போஹைட்ரேட், 6.71 கிராம் புரதச்சத்து உள்ளது. 27 சதவீதம் வைட்டமின் ஏ, 0.25 சதவீதம் கால்சியம், 35 சதவீதம் வைட்டமின் சி, 174 சதவீதம் இரும்பு, 41 சதவீதம் மெக்னீசிய சத்தும் உள்ளது.
ஜாதிபத்திரி அல்லது ஜாவித்திரி என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களுள் ஒன்று. இது உங்கள் சமையலுக்கு சுவை சேர்ப்பதுடன், உங்கள் உடலுக்கும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. ஜாவித்திரி, ஜாதிக்காயை சுற்றிப்படரும் மெழுகு போன்ற படலத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இது ஜாதிக்காயைவிட எடை குறைவாக இருக்கும்.
ஆசிய உணவுகளில் அதிகம் இடம்பெறுகிறது. வலியை குணப்படுத்துகிறது. செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. குமட்டல், வாந்தி போன்ற உடல் உபாதைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
ஜாவித்திரியின் நன்மைகள்
உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
பசியை அதிகரிக்கிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
மனஅழுத்தத்தை போக்குகிறது.
பல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
சிறு நீரகத்தை பாதுகாக்கிறது.
சளி மற்றும் இருமலுக்கு ஆறுதல் அளிக்கிறது.
உணவின் மணத்தை அதிகரிக்கிறது.
வீக்கத்துக்கு எதிரான தன்மைகள் உள்ளது.
பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுகிறது.
ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டுகிறது.
ஜாவித்திரியால் ஏற்படும் பக்கவிளைவுகள்
ஜாவித்திரி தாவர உணவாகும். இதை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம் எடுத்துக்கொண்டால், உடலுக்கு கேடு விளைவிக்கும். இது கர்ப்பிணிகளில் கருக்கலைவை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது சிறந்தது கிடையாது. இதை வழக்கமாக அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. இதை இரண்டு சிட்டிகையைவிட அதிகளவு எடுத்துக்கொண்டால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
ஜாவித்திரி ஊறுகாய்கள், சாஸ், செட்ச்அப்கள் மற்றும் ஸ்டூவ் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறத். இனிப்பு புட்டிங்குகள், மஃபின்கள், கேக்குகள், பிரட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதை பால் அல்லது டீயில் கலந்து பருகலாம். இது மிளகுதூளைப்போன்ற சுவை கொண்டது. மேற்கத்திய நாடுகளில் இது சூப், சாதத்துடன் பரிமாறப்படுகிறது.
ஜாதிக்காயில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பற்பசைகள், இருமல் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய மற்றும் சீன பாரம்பரிய மருத்துவத்தில் ஜாதிபத்திரி நரம்பியல் கோளாறுகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதை அரைத்து அந்த பேஸ்ட்டை நெற்றியில் இட்டுக்கொள்வதும் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது.
டாபிக்ஸ்