Samba Godhumai Rava Biriyani : சம்பா கோதுமை ரவை பிரியாணி – அற்புதமான சுவையில் அசத்தும்!
Jan 06, 2024, 10:00 AM IST
Samba Godhumai Rava Biriyani : சம்பா கோதுமை ரவை பிரியாணி – அற்புதமான சுவையில் அசத்தும்!
பிரியாணி மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
மிளகு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
பட்டை – ஒரு இன்ச்
சோம்பு – அரை டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 7
கிராம்பு – 10
மராத்தி மொக்கு – 1
ஜாதிபத்திரி – 1
(இவையனைத்தையும் எண்ணெயின்றி ட்ரையாக வறுக்க வேண்டும். பின்னர் ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து எடுத்துகொள்ள வேண்டும்)
சம்பா கோதுமை ரவை பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
ஸ்டார் சோம்பு – 1
ஏலக்காய் – 1
மிளகு – கால் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 கீறியது
இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை – ஒரு கைப்பிடி
புதினா – ஒரு கைப்பிடி
தக்காளி – 1 நறுக்கியது
உருளைக்கிழங்கு – கால் கப்
கேரட் – கால் கப்
பச்சை பட்டானி – கால் கப்
மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
சம்பா கோதுமை ரவை – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, ஸ்டார் சோம்பு என அனைத்தையும் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்க வேண்டும். அதை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மல்லித்தழை, புதினா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் தக்காளி சேர்த்து அதையும் நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டானி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் மிளகாய் தூள், அரைத்து வைத்த பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சம்பா ரவையை சேர்த்து கிளறி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 15 நிமிடங்கள் குறைவான தீயில் வேகவிடவேண்டும் அல்லது 5 விசில் வரும் வரை வைத்திருக்க வேண்டும்.
குக்கர் ஆறியவுடன் திறந்து பார்த்தால், மணமணக்கும் சுவையான சம்பா கோதுமை ரவை பிரியாணி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர்பச்சடி மட்டுமே போதும்.
சம்பா ரவையில் வெறும் உப்புமா மட்டுமே செய்து போர் அடிக்காமல் இதுபோல் செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.
டாபிக்ஸ்