Rose Day : காதலர் வாரத்தின் முதல் நாள் ரோஸ் மட்டுமல்ல எதுவும் பரிமாறிக்கொள்ளப்படுகிறது பாருங்க!
Feb 07, 2024, 06:00 AM IST
Rose Day : காதலர் வாரத்தின் முதல் நாள் ரோஸ் மட்டுமல்ல எதுவும் பரிமாறிக்கொள்ளப்படுகிறது பாருங்க!
ஆண்டுதோறும் பிப்ரவரி 7ம் தேதி கொண்டாடப்படும் ரோஸ் டே அதாவது ரோஜா தினம் உலகெங்கும் காதலர்கள் மனதின் ஒரு தனி இடம் பிடித்த நாள். ஏனெனில் ஒரு வார கொண்டாட்டத்தின் துவக்கம். ரோஜாவையும், அன்பையும் பரிமாறிக்கொள்ளும் நாள். அந்த நாளில் வேறு ஒன்றும் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. அது என்ன என்று தெரிந்தால் இன்னும் ஆச்சர்யப்படுவீர்கள். அதை தெரிந்துகொள்ள தொடர்ந்து முழுமையாக படியுங்கள். இனிய ரோஜா தின வாழ்த்துக்கள்!
உலகம் முழுவதும் காதலர்கள் எதிர்பார்த்த காதலர் தின கொண்டாட்டங்கள் களைகட்டத்துவங்கிவிட்டன. உலகமே சிவப்பு நிறம் பூசிக்கொண்டிருக்கிறது. அது அன்பை காட்டுகிறது.
தங்களின் உண்மை காதலை தேடி கண்டுபிடித்துவிட்டவர்கள் இந்த நாளை அவர்களுக்கு விருப்பமானவர்களுடன் கொண்டாடுகிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதுக்குமான அர்ப்பணிப்பை இருவரும் செய்துகொள்கிறார்கள்.
காதலர் தினம் காதலின் மதிப்பை காட்டுகிறது. எல்லா தடைகளையும் அது எவ்வாறு கடந்து வந்தது என்று காட்டுகிறது. காதலர் தின கொண்டாட்டங்கள் பிப்ரவரி 7ம் தேதி ரோஸ் டேயில் துவங்கி 14ம் தேதி காதலர் தினம் அதாவது வேலண்டைன்ஸ் டே அன்று முடிவடைகின்றன.
ரொமாண்டிக் காலத்தின் முதல் நாளாக ரோஸ் டே உள்ளது. காதலர்கள் மற்றும் தனியாக இருப்பவர்கள் வெளியே சென்று கொண்டாடுகிறார்கள். காதல் வாரத்தின் முதல் நாள் ரோஸ் பொக்கே காற்றில் நறுமணத்தையும், கண்களுக்கு கவர்ச்சியான சிவந்த நிறத்தையும் கொடுக்கின்றன.
இந்த நாளின் வரலாறு
பிப்ரவரி 7ம் தேதி கொண்டாடப்படும் ரோஸ் டே குறித்து தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ரோமன் இதிகாசத்தில் ரோஜாப்பூக்கள் மர்மம் மற்றும் வேட்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இது அன்பு மற்றும் அழகு கடவுளான வீனசுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
ஆசியா மற்றும் அரேபிய கலாச்சாரங்களில் ரோஜாக்கள் அன்பின் அடையாளமாக உள்ளது. இதன் நறுமணம் மற்றும் நிறத்தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. விக்டோரியாவைச் சேர்ந்தவர்கதான் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை வெளிக்காட்டுவதற்காக முதன்முதலில் ரோஜாக்கள் கொடுத்தார்கள் என்று நம்பப்படுகிறது.
அப்போது முதல் பிப்ரவரி 7ம் தேதி ரோஜா தினம் அதாவது ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் காதலர்கள் ரோஜாக்களை கொடுத்தும், பெற்றும் மகிழ்கிறார்கள்.
முக்கியத்துவம்
அன்பு மற்றும் பாசத்தின் அடையாளமான ரோஜாக்களுடன் காதலர் வாரம் துவங்குகிறது. அதனால்தான் முதல் நாள் ரோஸ் டே. இன்று உணர்வுகள் மற்றும் சென்டிமென்ட்கள் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. குறிப்பாக ரொமாண்டிக்கான ஒன்று பகிர்ந்துகொள்ளப்படுகிறது. அன்பின் அடையாளமாக அன்று ரோஜாக்கள் கொடுக்கப்படுகிறது.
ஒரு வாரக்கொண்டாட்டத்திற்கான முன்னுரையை ரோஜா தினம் எழுதிச்செல்கிறது. பல வண்ண ரோஜாக்கள் அடங்கிய பொக்கேக்களையும் கொடுக்கலாம் அல்லது ஒரே ஒரு ரோஜாவையும் கொடுக்கலாம். எதை வேண்டுமானாலும் கொடுத்து உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.
இது ஒரு அர்த்தமுள்ள பொக்கிஷமான நாள். நண்பர்கள் மற்றும் காதலர்கள் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்றுள்ள அழகான உறவுகளை பொக்கிஷமாக வைத்துக்கொண்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் அழகிய நினைவுகளை கொண்டதாக இருக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்