Relationship : உங்கள் உறவு உடையும் தருவாயில் உள்ளதா? இந்த அறிகுறிகள் உள்ளதா பாருங்கள்! என்ன செய்வது? இதோ வழிகாட்டி!
Aug 17, 2024, 02:59 PM IST
Relationship : உங்கள் உறவு உடையும் தருவாயில் உள்ளதா? இந்த அறிகுறிகள் உள்ளதா என்று பாருங்கள். என்ன செய்து அதை காப்பாற்றுவது? இதோ வழிகாட்டியை பாருங்கள்.
உங்கள் உறவு உடையும் தருவாயில் உள்ளது என்பதன் வழிகாட்டி இதுதான். அதை என்ன செய்து நீங்கள் காப்பாற்ற முடியும் என்று பாருங்கள்.
அறிகுறிகளை அறிந்துகொள்வது
உங்கள் உறவு கடும் சிக்கலில் உள்ளது அல்லது அதை உடையும் தருவாயில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளவேண்டுமென்பது உங்கள் உணர்வு நலனுக்கு மிகவும் நல்லது. அதுவே உங்கள் எதிர்கால மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கிறத. உங்கள் உறவு எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு அதை சரிசெய்ய முடியுமா அல்லது கடந்து செல்ல வேண்டுமா என்பதை பாருங்கள்.
தொடர் சண்டைகள்
உங்கள் உறவில் தொடர்ந்து சண்டைகள் ஏற்படுகிறதா, விவாதங்களை தீர்க்க முடியவில்லையா? உறவில் ஆழ்ந்த பிரச்னைகள் உள்ளதா? இவையெல்லாம் இருந்தால் உங்கள் உறவு சிக்கலில் உள்ளது என்று பொருள். உங்கள் உறவில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தால் அல்லது அதை தீர்க்கவே முடியவில்லை என்றால், உங்கள் உறவு சரிசெய்யக்கூடிய நிலையை கடந்துவிட்டது என்று பொருள். எனவே நீங்கள் இப்போது என்ன முடிவை எட்டவேண்டும் என்று பார்ப்பது அவசியம்.
உணர்வு ரீதியான தொடர்பின்மை
உங்களுக்கும், உங்கள் பார்ட்னருக்கும் இடையில் இடைவெளி அல்லது விலகல் ஏற்படுவதும் ஒரு முக்கிய காரணமாகும். இது உங்கள் உறவு அழிவில் உள்ளது என்பதன் வலுவான ஆதாரமாகும். உங்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவு இல்லை. உணர்வு ரீதியாக நீங்கள் தொடர்பில் இல்லையென்றால், உங்களுக்கு இடையே ஆரோக்கியமான உறவைப் பேணுவது என்பது சவாலான ஒன்றாகும்.
தொடர்பு குறைவது
ஆரோக்கியமான உறவில் நேர்மையான, வெளிப்படையான உரையாடல் தேவை. நீங்களும், உங்கள் பார்ட்னரும் தொடர்புகொள்வதை முற்றிலும் நிறுத்திவிட்டீர்கள் என்றால், முக்கியமான விஷயங்கள் குறித்து நீங்கள் பேசவில்லையென்றால், இது உங்களிடையே புரிதலின்மையை வளர்த்தெடுக்கும். இதனால் உங்களுக்கு இடைவெளி ஏற்பட்டுவிடும்.
மனக்கசப்பு
உங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே சென்றால், அது உங்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்திவிடும். நீங்களும் உங்கள் பார்ட்னரும் நீண்ட நாள் மனக்கசப்பில் இருந்தால், அது உங்களின் உறவில் நஞ்சை விதைக்கும். உங்கள் உறவை முன்னேற்றிச் செல்வதை கடுமையாக்கும்.
நெருக்கம் குறையும்
நெருக்கம், உணர்வு ரீதியான அல்லது உடல் ரீதியான நெருக்கம் இவையிரண்டும் ரொமாண்டிக் உறவில் மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் நெருக்கம் முற்றிலும் குறைந்தாலோ அல்லது நெருக்கம் முற்றிலும் இல்லாவிட்டாலோ உங்கள் உறவு கடும் சிக்கலில் உள்ளது என்று பொருள். இது இருவரின் உறவையும் நீண்ட நாட்கள் வைத்திருக்க உதவாது.
மகிழ்ச்சியின்மை அல்லது சிக்கிக்கொண்ட உணர்வு
நீங்கள் சிக்கிக்கொண்டதைப்போல் உணர்ந்தாலோ அல்லது மகிழ்ச்சியின்றி இருந்தாலோ அல்லது உங்கள் உறவில் முழுமையின்மையை உணர்ந்தாலோ உங்கள் உறவு சரியான திசையில் செல்கிறதா அல்லது ஏதேனும் சிக்கலில் உள்ளதா என நீங்கள் மீண்டும் அதை மதிப்பிட்டு பார்க்கவேண்டும். அப்போது இதுபோன்ற உணர்வுகளே அதிகம் இருந்தால் உங்கள் உறவில் நீங்கள் நீண்ட காலங்கள் வாழ முடியாமல் போய்விடும்.
மற்றவர்களிடம் ஆர்வம் அதிகரித்தால்
உங்கள் உறவைத்தாண்டி நீங்களோ அல்லது உங்கள் பார்ட்னருக்கே வேறு ஒருவர் மீது ஆர்வம் அதிகரித்தால் உங்கள் உறவில் சிக்கல் உள்ளது என்று பொருள். உங்களின் தேவைகள் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்று பொருள். இதனால் உங்கள் பிரச்னைகள் அதிகரிக்கும். இதுவும் உங்கள் உறவு விரைவில் முடிவடையும் என்பதை காட்டுகிறது.
டாபிக்ஸ்