தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Reasons For Hair Loss : கொத்துக்கொத்தாக கொட்டும் முடியால் அவதியா? இதுதான் காரணங்கள்! தவிர்க்க என்ன செய்வது?

Reasons for Hair Loss : கொத்துக்கொத்தாக கொட்டும் முடியால் அவதியா? இதுதான் காரணங்கள்! தவிர்க்க என்ன செய்வது?

Priyadarshini R HT Tamil

May 10, 2024, 01:56 PM IST

Hair Loss : உங்களுக்கு திடீரென தலைமுடி கொட்டுகிறதா? அதற்கான காரணங்கள் இதுவாக இருக்கலாம். அதன் மருத்துவ காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
Hair Loss : உங்களுக்கு திடீரென தலைமுடி கொட்டுகிறதா? அதற்கான காரணங்கள் இதுவாக இருக்கலாம். அதன் மருத்துவ காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Hair Loss : உங்களுக்கு திடீரென தலைமுடி கொட்டுகிறதா? அதற்கான காரணங்கள் இதுவாக இருக்கலாம். அதன் மருத்துவ காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

முடி உதிர்தலுக்கான முக்கிய காரணங்கள்

திடீரென அதிகளவில் முடி உதிர்வது நமக்கு கவலை ஏற்படுத்தக்கூடியது மற்றும் அக்கறை கொள்ள வேண்டியதும் ஆகும். இது நமது தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, நமது மன ஆரோக்கியத்துக்கும் சவாலான ஒன்றுதான்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weight Loss Snacks: எடை குறைப்புக்கு வழிவகுக்கும் நார்சத்து மிக்க ஸ்நாக்ஸ் வகைகள்! வீட்டிலேயே தயார் செய்யலாம்

Avoid rapid weight loss: ‘விரைவான எடை இழப்பு வேண்டாம்.. வாரத்திற்கு எவ்வளவு எடை குறைந்தால் நல்லது?’-ICMR

Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று!

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

முடி உதிர்வு என்றாலே அதற்கான காரணங்களாக வயோதிகம், மனஅழுத்தம் ஆகியவை உள்ளது. ஆனால் அதையும் கடந்து சில முக்கிய காரணங்களும் முடிஉதிர்வை ஏற்படுத்துகின்றன. அவை என்னவென்று தெரிந்துகொண்டு அவற்றை தடுக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பது மிகவும் அவசியம்.

ஹார்மோன்கள் சமமின்மை

தலைமுடி வளர்ச்சிக்கு ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்கள் சமம் இல்லாவிட்டால், அது அதிகப்படியான முடி உதிர்வுக்கு காரணமாகிறது. ஆன்ட்ரோஜென்கள், தலைமுடியின் வேர்க்கால்களை சேதமடையச் செய்வதால், அதிகப்படியான தலைமுடி உதிர்வு ஏற்படாலாம். இதனுடன், குடும்ப கட்டுப்பாடு முறைகள் பயன்பாடு மற்றும் மெனோபாஸ் ஆகியவற்றால், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களும் முடி உதிர்வை அதிகரிக்கலாம்.

மரபணு காரணிகள்

ஆண்களில் வழுக்கை ஏற்படுவதற்கு யூ – வடிவ வழுக்கை முறை காரணமாகிறது. மரபணுக்கள், குடும்பத்தினரிடையே கடத்தப்படுவதால், தலைமுடி உதிர்வு ஏற்படுகிணுது. இது மனஅழுத்தத்தால் மட்டுமல்ல மரபணுவாலும் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. இதற்கு தாய் மற்றும் தந்தை வழி என இரண்டு புறத்தின் மரபணுக்களும் காரணமாகின்றன.

தைராய்ட் பிரச்னைகள்

ஹைப்போதைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்ட் என இரண்டுமே முடி வளர்ச்சியை பாதித்து, தலைமுடி உதிர்வை ஏற்படுத்துகிறது. உடலின் பல்வேறு இயக்கங்களையும் தைராய்ட் ஹார்மோன்கள் முறைப்படுத்துகிறது. அதில் தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும். தலைமுடி உதிர்வுக்கு தைராய்ட் ஹார்மோன்களில் ஏற்படும் சமமின்மையும் காரணமாகும்.

வயது

நமக்கு வயதாக வயதாக, தலைமுடி வளர்ச்சி குறையும். முடியின் வேர்க்கால்கள் முடி உற்பத்தியை நிறுத்திவிடும். இயற்கையாகவே வயதாகும்போது, உங்கள் தலைமுடி குறையும். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.

மாத்திரைகளின் பக்கவிளைவுகள்

சில மருந்துகள், பொதுவான உடல் உபாதைகளுக்கு எடுத்துக்கொள்பவையாகும். ஆனால் அவை தலைமுடியையும் இழக்கச்செய்யும். ரத்தக்கொதிப்பு போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள், வீக்கத்துக்கு எதிரான மாத்திரைகள், ரெட்டினாய்ட் போன்ற வைட்டமின் மாத்திரைகள், தலைமுடி உதிர்வை அதிகரிக்கும் அல்லது வழுக்கையை ஏற்படுத்தும்.

போஸ்ட்பார்டம், நோய்மை அல்லது மனஅழுத்தம்

குழந்தை பிறப்பு, நோய்மையில் இருந்து குணமாவது, மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் தீவிர மனஅழுத்தம் ஆகியவை தலைமுடி உதிர்வை ஏற்படுத்துகின்றன. இவையெல்லாம் தற்காலிக நிலைகளாகும். இது டெலோஜென் எஃப்ளூவியம் என்று அழைக்கப்படும். இது சில மாதங்கள் மட்டுமே இருக்கும்.

அதிக தலைமுடி கவனம்

அடிக்கடி தலைமுடியை நிறம் மாற்றுவது, தலையில் சூடாக்கி ஸ்டைல் செய்வது, தலைமுடியை சேதப்படுத்துவது ஆகியவை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் செய்யும்போது, அது தலைமுடி இழப்பை ஏற்படுத்தும். எனவே இவற்றையெல்லாம் குறைவான அளவே எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே உங்கள் முடியை ஸ்டைல் செய்யும்போது கவனமாக இருப்பது, உடலில் தேவையற்ற தலைமுடி சேதத்தை தடுக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் குறைபாடு

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தலைமுடி வளர்ச்சிக்கு உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்தான் முக்கிய காரணமாகின்றன. அதிகப்படியான டயட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளாமல் போவது என அனைத்தும் தலைமுடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

அதிர்ச்சிகள்

விபத்து, சிகிச்சைகள், தீக்காயங்கள் அல்லது நாள்பட்ட பாதிப்புக்கள், இறப்பை தோற்றுவிக்கும் காரணிகள் என அனைத்தும், தலைமுடி உதிர்வுக்கு காரணமாகும். இதுவும் இயற்கையாகவே முடிவளர்வதை தடுக்கும். இதனால் திடீர் தலைமுடி இழப்பு ஏற்படும்.

மனஅழுத்தம்

தலைமுடி இழப்புக்கு காரணம் மனஅழுத்தம் ஆகும். டெலோஜென் எஃப்லூவம் என்ற குறிப்பிட்ட வகையுடன், அது தொடர்புடையது. இது உடல் மற்றும் மனரீதியான அழுத்தத்தால், ஏற்படுகிறது.

இவைதான் தலைமுடி கொட்டுவதற்கான காரணங்கள். இவற்றை சரிசெய்தாலே முடி உதிர்வு குறையும். உங்கள் ஒவ்வொருவரின் பிரச்னைகளையும் உணர்ந்து தலைமுடி உதிர்வு பிரச்னைகளை அணுகுங்கள். அப்போது எளிதாக குணப்படுத்தலாம். 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி