Nuts Drink : தினமும் காலை இந்த ஒரு பானம் மட்டும் போதும்! புற்றுநோய் முதல் மனஅழுத்தம் வரை பறந்தோடும் மாயம் செய்யும்!
Nuts : இவற்றை நாம் அப்படியே சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மை கிடைக்கும்தான் அல்லது மிக்ஸியில் அரைத்தும் சாப்பிடலாம். ஆனால் அதிக இனிப்பு உள்ள அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை பற்களால் கடித்து சாப்பிடும்போது பற்கள் சேதமடைய வாய்ப்புள்ளதால், இதை சாப்பிடுவதற்கான எளிய வழியாக இதுபோல் பானம் தயாரித்து பருகலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம் – 5
பிஸ்தா – 5
உலர் திராட்சை – 15
வால்நட் – 10
பேரிட்சை பழம் – 3
அத்திப்பழம் – 2
செய்முறை
பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, வால்நட், பேரிட்சை பழம், அத்திப்பழம் என அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் அவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
காலையில் ஊறவைத்த தண்ணீரை வடித்துவிட்டு, அவற்றை எடுத்து மிக்ஸிஜாரில் முதலில் நன்றாக அரைத்துவிடவேண்டும். ஊறவைத்த தண்ணீரை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும். கீழே ஊற்றிவிடக்கூடாது.
பின்னர் அதை ஊறவைத்த தண்ணீரையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தையும் அரைத்து ஒரு ஜூஸாக தயாரித்துக்கொள்ள வேண்டும். இதை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு பருகவேண்டும்.
காலையில் வழக்கமான காஃபி மற்றும் டீ போன்றவற்றை தவிர்த்துவிட்டு, இதை மட்டும் தினமும் எடுத்தாலே போதும். உங்களிடம் நோய்கள் வராது.
இவற்றை நாம் அப்படியே சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மை கிடைக்கும்தான் அல்லது மிக்ஸியில் அரைத்தும் சாப்பிடலாம். ஆனால் அதிக இனிப்பு உள்ள அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை பற்களால் கடித்து சாப்பிடும்போது பற்கள் சேதமடைய வாய்ப்புள்ளதால், இதை சாப்பிடுவதற்கான எளிய வழியாக இதுபோல் பானம் தயாரித்து பருகலாம்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பருகலாம். உங்கள் உடலுக்கு இந்த பானம் பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது. இது இனிப்பாக இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
நட்ஸ்களில் உள்ள நன்மைகள்
அனைத்து வகையான நட்ஸிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது இதயத்துக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது.
நட்ஸில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது பொதுவாக பொலிவான சருமத்திற்கு தேவையான மிகவும் இன்றியமையாத வைட்டமின் ஆகும். மேலும் இந்த வைட்டமின் தான் இளமையைத் தக்க வைக்கும் சக்தி கொண்டது.எனவே இளமையாகவே இருக்க விரும்புபவர்கள் அதிகளவில் நட்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நட்ஸில் குறிப்பாக வால்நட்ஸில் ஆல்பா லினோலினிக் என்னும் மன அழுத்தத்தை விரட்டும் அமிலம் உள்ளது. எனவே வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள், அவ்வப்போது வால்நட்ஸை சாப்பிட்டு வாருங்கள். இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
பிஸ்தாவை டயட்டில் சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பிஸ்தாவில் அதிகளவில் காமா டோகோபெரால் என்னும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். எனவே முயற்சி செய்து பலன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்