சிவனுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. தொட்டுப் பார்க்கவே யோசிக்கணும்-lord shiva favorite lucky zodiac signs can be found here - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சிவனுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. தொட்டுப் பார்க்கவே யோசிக்கணும்

சிவனுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. தொட்டுப் பார்க்கவே யோசிக்கணும்

May 10, 2024 09:42 AM IST Suriyakumar Jayabalan
May 10, 2024 09:42 AM , IST

  • Lord Shiva:  நவகிரகங்களின் அடிப்படையில் 12 ராசிகளும் இயங்கினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இங்கே காணலாம்.

முழுமுதற் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். இந்து சமயத்தில் மிக முக்கிய கடவுளாக விளங்கி வரும் சிவபெருமான் உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாக லிங்கத்திருமேனியில் காட்சி கொடுத்து வருகிறார். 

(1 / 7)

அண்ட சராசரங்களையும் ஆட்சி செய்யும் கடவுள் ஆக சிவபெருமான் விளங்கி வருகின்றார். உயிரினங்கள் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. மன்னர்கள் காலத்தில் போர் புரிந்து வெற்றி கண்டாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். 

(2 / 7)

குறிப்பாக சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் இருவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். பல சிறப்பான கோயில்கள் கட்டி இன்று வரை அசைக்க முடியாத நிலைமையில் சிறப்பு வாய்ந்து கோயில்கள் விளங்கி வருகின்றன. நவகிரகங்களின் அடிப்படையில் 12 ராசிகளும் இயங்கினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசுகள் குறித்து இங்கே காணலாம். 

(3 / 7)

மேஷ ராசி: கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் நீங்கள் செவ்வாய் பகவானால் ஆளப்படும் நீங்கள், உங்கள் திட்டத்தின் மீது குறியாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தில் எப்போதும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் வரை விட மாட்டீர்கள். முழுமுதற் கடவுளாக விளங்கிவரும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். வாழ்க்கையில் எத்தனை பெரிய சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய பலத்தை சிவபெருமான் உங்களுக்கு கொடுப்பார். 

(4 / 7)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானால் ஆளப்படும். உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி எப்பொழுதும் அதிகம். இயற்கையாகவே நீங்கள் மிகவும் புத்திசாலித்தனத்தோடு செயல்பட கூடியவர்கள். சிவபெருமானின் விசேஷ அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. வேலை செய்யும் இடம் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட இடங்களில் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி. 

(5 / 7)

மகர ராசி: சனிபகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள். சனிபகவான் சிவபெருமானின் தீவிர பக்தராக விளங்கி வருகிறார். சனி பகவானின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும். ஏனென்றால் சிவபெருமானின் ஆசி உங்களுக்கு முழுமையாக இருக்கும். ஏழரை சனி காலத்தில் கூட சிவபெருமானை நீங்கள் வழிபட்டால் உங்களுக்கு அனைத்து சிக்கல்களும் விலகும். 

(6 / 7)

கும்ப ராசி: சனிபகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஈஸ்வரனின் திருநாமத்தை பெற்ற நவகிரகங்களில் முக்கியமானவர் சனீஸ்வரன். சனிபகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். ஏனென்றால் சனிபகவானுக்கு ஆசிர்வாதம் செய்யக் கூடியவர் சிவபெருமான். சிவபெருமான் முன்னேற்றத்தை கொடுக்கக் கூடிய ராசிக்காரர்கள் நீங்களும் ஒருவர். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்