Rava Kozhukattai : வழக்கமான கொழுக்கட்டை சாப்பிட்டு ஒரே போரிங்கா? இதோ இப்டி செஞ்சு பாருங்க!
Nov 20, 2023, 12:18 PM IST
Rava Kozhukattai : வழக்கமான கொழுக்கட்டை சாப்பிட்டு ஒரே போரிங்கா? இதோ இப்டி செஞ்சு பாருங்க!
(ரவை அளவு எந்த கப்போ அதே அளவு கப் தான் வெல்லம், மைதா § தேங்காய் துருவலுக்கும்)
தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
வெல்லம் - ஒன்றரை கப்
மைதா - கால் கப்
ஏலக்காய்த் தூள் - அரை ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் – அரை கப்
தூள் முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, நெய் சூடானவுடன், ரவையை ஓரிரு நிமிடம் மணக்க மணக்க வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஆறியவுடன் அதை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெல்லத்தில் சிறிதளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சி, கட்டி தட்டாது வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். (பாகு பதம் தேவையில்லை)
ஒரு கிண்ணத்தில் பொடித்த ரவை, தூள் முந்திரி, மைதா, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், உப்பு, சிறிது எண்ணெய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவை 30 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்.
கைகளில் ஆயில் தடவிக் கொண்டு பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கைகளால் உருண்டை கொழுக்கட்டை பிடிக்கவேண்டும்.
பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லிப் பானையில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு எடுத்து பரிமாறவேண்டும். இதை பிடி கொழுக்கட்டை போலவும் பிடிக்கலாம். வழக்கமான கொழுக்கட்டை போலன்றி வித்யாசமான சுவையில் அள்ளும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மழைக்காலத்திற்கு ஏற்ற ஒரு மாலை நேர சிற்றுண்டி. மழைக்காலத்தில் வயிறு மற்றும் செரிமான உறுப்புகள் கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கும். அதற்கு இதுபோன்ற வேகவைத்த உணவுகள்தான் சிறந்தது. இந்த கொழுக்கட்டையை செய்து அசத்துங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.