தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Prawn Gravy : பார்க்கும்போதே எச்சில் ஊறவைக்கும்! சண்டேவை ஸ்பெஷலாக்கும் இறால் கறி!

Prawn Gravy : பார்க்கும்போதே எச்சில் ஊறவைக்கும்! சண்டேவை ஸ்பெஷலாக்கும் இறால் கறி!

Priyadarshini R HT Tamil

Dec 10, 2023, 10:00 AM IST

google News
Prawn Gravy : பார்க்கும்போதே எச்சில் ஊறவைக்கும். சண்டேவை ஸ்பெஷலாக்கும் இறால் கறி.
Prawn Gravy : பார்க்கும்போதே எச்சில் ஊறவைக்கும். சண்டேவை ஸ்பெஷலாக்கும் இறால் கறி.

Prawn Gravy : பார்க்கும்போதே எச்சில் ஊறவைக்கும். சண்டேவை ஸ்பெஷலாக்கும் இறால் கறி.

தேவையான பொருட்கள்

இறாலை ஊறவைக்க

இறால் – அரை கிலோ

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 3 ஸ்பூன்

தனியா தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – ஒன்றரை ஸ்பூன்

மசாலா தூள் அரைக்க

தனியா – 2 ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்

ஏலக்காய் – 4

கிராம்பு – 4

பட்டை – 3 துண்டு

காஷ்மீரி மிளகாய் – 7

காய்ந்த மிளகாய் – 7

இறால் கறி செய்ய

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 25 பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – 2 கொத்து

இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்

தக்காளி – 2 நறுக்கியது

தேங்காய் பால் – ஒரு கப்

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி நறுக்கியது

செய்முறை -

இறாலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவேண்டும்.

கடாயில் தனியா, சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, காஷ்மீரி மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவிட்டு பொடியாக அரைத்து கொள்ளவேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.

பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிடவேண்டும்.

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

இறாலை சேர்த்து கலந்து பின்னர் மிளகாய் தூள், அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும்.

தண்ணீர் மற்றும் தேங்காய் பால் ஊற்றி கலந்துவிட்டு, மூடிவைத்து நன்றாக வேகவிடவேண்டும்.

கடாயை மூடி 8 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேகவிடவேண்டும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவேண்டும்.

இறால் கறி சாப்பிட தயார்.

இந்த கிரேவியை நீங்கள் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். கடல் உணவுகளை விரும்புபவர்களுக்கு இது சிறந்தது. இந்த இறால் கறிக்கும் வீட்டில் உள்ள மசாலா பொருட்களே போதுமானது. இது சுவை நிறைந்ததாக இருக்கும். தேங்காய்ப்பால் சேர்த்து இறால் கறிக்கு கூடுதல் சுவையை கொடுக்கும். இந்த சுவை நிறைந்த கிரேவியை நீங்கள், ஜீரா சாதம், பச்சை பட்டாணி சாதம், நெய் சோறு ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சுவை அள்ளும்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி