Parenting Tips : உங்கள் டீன் ஏஜ் மகன்களுக்கு நண்பர்கள் ஆகவேண்டுமா? அதற்கு இதை செய்யுங்கள் போதும்!
Jul 26, 2024, 03:00 PM IST
Parenting Tips : உங்கள் டீன் ஏஜ் மகன்களுக்கு நண்பர்கள் ஆகவேண்டுமெனில் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுடன் நட்பு பாராட்டுவது உங்களுக்கு நல்லது. அப்போதுதான் அவர்களுடன் நீங்கள் இணக்கத்தை உருவாக்கி உங்கள் உறவை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
உங்கள் டீன்ஏஜ் மகன்களுடனான உங்கள் உறவு சவால்கள் நிறைந்தது மற்றும் பாராட்டுக்குரியது
உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுடன் வலுவான நட்பை உருவாக்க வேண்டுமெனில், அதற்கு புரிதல், தொடர்புகொள்தல் மற்றும் மரியாதை என அனைத்தும் தேவைப்படுகிறது. குறிப்பாக ஆண் குழந்தைகள் என்றால் கூடுதல் கவனம் தேவை.
உங்கள் டீன்ஏஜ் மகன்களுடன் வலுவான மற்றும் நேர்மறையான நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனில், அதற்கு உங்களுக்கு சில குறிப்புகள் உதவக்கூடும் அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நன்றாக கவனியுங்கள்
உங்கள் குழந்தைகளின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, இடையூறு செய்யாமல் அதை முழுமையாக உற்று கவனியுங்கள். இது நீங்கள் அவர்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. மேலும் உங்களுடன் திறந்த மற்றும் வெளிப்படையான உரையாடல் நடத்தவும் உதவுகிறது.
அவர்களின் தனி சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுங்கள்
டீன் ஏஜ் குழந்தைகளின் தனி சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுங்கள். எல்லைகளை மதித்து, அவர்களின் அறைகளுக்கு செல்வதற்கு முன்னர், கதவைத் தட்டுவது மற்றும் அவர்களின் தனிப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் செய்திகளை படிப்பது என்பதை செய்யாதீர்கள். இவற்றையெல்லாம் அவர்களாகவே உங்களிடம் பகிரும்போது மட்டும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
பொதுவான ஆர்வங்கள்
உங்கள் குழந்தைகளுக்குப்பிடித்த ஹாபிக்கள், செயல்கள் என்னவென்று கண்டுபிடியுங்கள். அவர்கள் எதை மகிழ்வுடன் செய்வார்கள் என்று பாருங்கள். அது விளையாட்டு, திரைப்படங்கள் அல்லது இசை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பகிரப்பட்ட ஆர்வ்ங்களால் அவர்களுடன் நீங்களும் இணைந்து இருக்கும்போது, உங்கள் இருவரிடையே பிணைப்பு அதிகரிக்கிறது. அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குகிறது. இது நீங்கள் தரமான நேரத்தை ஒன்றாக இணைந்து செலவிட வாய்ப்பையும் உருவாக்கும்.
தெளிவான எல்லைகள்
உங்கள் வீட்டில் உள்ள விதிகளுக்கு காரணங்கள் அவசியம் மற்றும் எல்லைகளை ஒன்றாக இணைந்து வகுத்துக்கொள்ளுங்கள். அவர்களை முடிவெடுக்கும் பொறுப்பில் இணைத்துக்கொள்ளவேண்டும். எனவே உங்களின் இந்த தெளிவான எதிர்பார்ப்புகள், இருவருக்கும் மரியாதையை ஏற்படுத்தி தரும். புரிதலையும் கற்றுக்கொடுக்கும்.
வழிகாட்டுதல், அறிவுரை அல்ல
உங்கள் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கும்போது, வழவழவென இழுக்காதீர்கள். அவர்களின் சிந்தனைத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் பிரச்னைகளை தீர்க்கும் உரையாடல்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள். ஒரு உறுதுணையான வழிகாட்டியாக இருங்கள். அதிகாரம் பெற்ற கடுமையான குடும்ப உறுப்பினராக இருக்காதீர்கள்.
சுதந்திரம் அவசியம்
உங்கள் குழந்தைகளை முடிவெடுக்க அனுமதியுங்கள். அவர்கள் அவர்களின தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளட்டும். வழிகாட்டுதலும், தனிப்பட்ட அதிகாரத்தையும் எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்கு புரியும். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களுக்கு பொறுப்பை கூட்டும்.
அன்பும், ஆதரவும்
உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் அன்பும், ஆதரவும் இருக்கட்டும். அவர்களின் வெற்றிகளைக் கொண்டாடுங்கள். அவர்களுக்கு சவால் நிறைந்த சூழல்களில் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் வாழ்வில் எப்போதும் முக்கிய அங்கமாக இருங்கள்.
அவர்களின் நண்பர்களிடம் வெளிப்படையாக இருங்கள்
உங்கள் வீட்டிற்கு அவர்களின் நண்பர்களை அழைப்பது மற்றும் அவர்கள் குறித்து தெரிந்துகொள்வதில் அக்கறை காட்டுவது என நீங்கள் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவர்களின நண்பர்களுடன் நேர்மறையான உறவை வளர்த்துக்கொள்வது, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உங்கள் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது.
பிரச்னைகளின்போது அமைதி
உங்கள் டீன் ஏஜ் மகன்கள் பிரச்னைகளைக் கொண்டு வருவார்கள். அப்போது அமைதியாக இருப்பது மிகவும் அவசியம். அப்போது நீங்கள் உடனடியாக எதிர்வினையாற்றுவதை தவிர்க்கவேண்டும். அவர்கள் என்ன கூறுகிறார்கள், அவர்களின் கோணம் என்ன என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இருவரும் ஒன்றிணைந்து தீர்வுகளை காணவேண்டும்.
உதாரணமாகுங்கள்
உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள், வாழ்வில் நல்ல மதிப்புக்களை கற்கவும், நடத்தைகளை பின்பற்றவும், அவர்களுக்கு உதாரணமாகுங்கள். அவர்களுக்கு அனுதாபம், ஒற்றுமை மற்றும் மீண்டெழும் திறனை கற்றுக்கொடுங்கள். அதை முதலில் நீங்கள் உங்கள் வாழ்வில் பின்பற்றுங்கள். அவர்களின் வாழ்வில் உள்ள சவால்களை அவர்கள் கடக்க அவர்களுக்கு உதாரணமாகுங்கள்.
டாபிக்ஸ்