Modi vs MK Stalin: ’இப்படியே பண்ணா தனிமைப்பட்டு போவீங்க பிரதமரே!’ மோடியை எச்சரித்த ஸ்டாலின்! விஷயம் இதுதானா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Modi Vs Mk Stalin: ’இப்படியே பண்ணா தனிமைப்பட்டு போவீங்க பிரதமரே!’ மோடியை எச்சரித்த ஸ்டாலின்! விஷயம் இதுதானா?

Modi vs MK Stalin: ’இப்படியே பண்ணா தனிமைப்பட்டு போவீங்க பிரதமரே!’ மோடியை எச்சரித்த ஸ்டாலின்! விஷயம் இதுதானா?

Kathiravan V HT Tamil
Jul 24, 2024 08:50 PM IST

Modi vs MK Stalin: “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

’இப்படியே பண்ணா தனிமைப்பட்டு போவீங்க பிரதமரே!’ மோடியை எச்சரித்த ஸ்டாலின்! விஷயம் இதுதானா?
’இப்படியே பண்ணா தனிமைப்பட்டு போவீங்க பிரதமரே!’ மோடியை எச்சரித்த ஸ்டாலின்! விஷயம் இதுதானா?

மூன்றாவது முறையாக பொறுப்பேற்று உள்ள மோடி அரசின் சார்பில் முதல் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

நிர்மலா சீதாராமன் உரை

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

9 முன்னுரிமைகள்

ஒன்பது முன்னுரிமைகளில் உற்பத்தி, வேலைகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும் என தெரிவித்த அவர், காலநிலையை எதிர்க்கும் விதைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் மேற்கொள்கிறது என தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்ற அவர், உற்பத்தியை அதிகரிக்க பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி கிளஸ்டர்கள் ஊக்குவிக்கப்படும் என்று கூறினார்.

பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பட்ஜெட் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்வதற்காக பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார். 

மற்ற மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்ய பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதில் சாதாரண இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் முந்தைய பட்ஜெட் மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளை காப்பி அடித்து பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது என விமர்சனம் செய்து இருந்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை என்றும், பட்ஜெட்டில் வழக்கமாக இடம் பெறும் திருக்குறளும் இல்லை, தமிழ்நாடும் இல்லை என்றும் நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டியில் கூறி இருந்தார். 

தமிழ்நாட்டை புறக்கணித்ததன் காரணமாக, பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் #INDIA கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

மாண்புமிகு பிரதமர் பிரதமர் அவர்களே…

தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.