தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pachai Mochai Gravy : பச்சை மொச்சை, கத்தரிக்காய் குழம்பு – நாவின் சுவை அரும்புகளை மலரச்செய்யும் ருசி!

Pachai Mochai Gravy : பச்சை மொச்சை, கத்தரிக்காய் குழம்பு – நாவின் சுவை அரும்புகளை மலரச்செய்யும் ருசி!

Priyadarshini R HT Tamil

Sep 15, 2023, 03:00 PM IST

google News
Pachai Mochai Gravy : பச்சை மொச்சை சேர்த்து கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Pachai Mochai Gravy : பச்சை மொச்சை சேர்த்து கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Pachai Mochai Gravy : பச்சை மொச்சை சேர்த்து கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பச்சை மொச்சை – 1 கப்

(தோல் நீக்கி, சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)

கடுகு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

கடலை பருப்பு – கால் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கத்தரிக்காய் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் – கால் ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

மசாலா விழுது அரைக்க தேவையான பொருட்கள்

பட்டை – 1 (நீளமானது)

கிராம்பு – 2

சோம்பு – கால் ஸ்பூன்

பூண்டு – 10 பல்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

தக்காளி – 2

கறிவேப்பிலை – 2 கொத்து

தேங்காய் – 4 ஸ்பூன்

(இதை கடாயில் எண்ணெய் சூடாக்கி மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். நன்றாக ஆறிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்)

மற்றொரு கடாயில், எண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.

பின்னர் கத்தரிக்காய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்த மசாலா விழுதை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

பின்னர் பச்ச மொச்சையை சேர்த்து கொதிக்கவிட்டால் குழம்பு ரெடி.

இதை சூடான சாதம், சப்பாத்தி, பூரி, இட்டி, தோசை என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி