தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Oneplus 10t: Know The 5g Phone Price And Other Specification

Oneplus 10T: அட்டகாசமான சார்ஜிங், குறைவான விலையுடன் ஒன்ப்ளஸ் 5G போன்!

Aug 12, 2022, 11:30 PM IST

ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து களமிறக்கி வந்த ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது புதிய 5G மாடல் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து களமிறக்கி வந்த ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது புதிய 5G மாடல் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து களமிறக்கி வந்த ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது புதிய 5G மாடல் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒன்ப்ளஸ் 10T என்ற பெயரில் அதன் 5G ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சமாக அதிவிரைவு சார்ஜிங் வசதி அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக போன்களை தொடர்ச்சிய களமிறக்கிய ஒன்ப்ளஸ் நிறுவனம், அதன் விலையையும் ஆப்பிள் நிறுவனத்துக்கு கொஞ்சம் இணையாகவே நிர்ணயித்து வந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Cognitive Function : உங்கள் அறிவாற்றலை பெருக்க வேண்டுமா? இதோ இந்த வைட்டமின்களை உணவில் சேருங்கள்!

Hair Fall Remedy : கைப்பிடி கறிவேப்பிலையை இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க! தலையில் இருந்து ஒரு முடி கூட கொட்டாது!

Parenting Tips : கவனம் பெற்றோர்களே! இந்த விஷயங்களை உங்கள் குழந்தைகளிடம் கூறிவிடாதீர்கள்!

Pomegranate Peel Tea : உடலுக்கு தேவையான எத்தனை நன்மைகளை கொடுக்கிறது பாருங்கள் இந்த ஒரு தேநீர்!

ஆனால் ஒன்ப்ளஸ் 10T தனது 5G ஸ்மார்ட்போன் பல நிறைவான அம்சங்களுடன் சற்று குறைவான விலையிலயே விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்ப்ளஸ் 10T விலை மற்றும் இதர அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் ஜேட் க்ரீன், மூன் ஸ்டோன் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அமேசான் தளம் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்று வாங்கிக் கொள்ளலாம்.

இந்த போன் 8GB+128GB, 12GB+256GB என இரண்டு வேரியண்ட்களிலும், முறையே இதன் விலையானது ரூ. 49,999, ரூ. 54, 999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வாங்குவோருக்கு வங்கி சலுகையும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

ஐசிஐசிஐ கிரெடில், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த ஸ்மார்போனுக்கு நேரடியாக ரூ. 5000 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ரூ. 44,999க்கு வாங்கிக் கொள்ளலாம்.

ஒன்ப்ளஸ் 10T அம்சங்களை பொறுத்தவரை 120HZ ரெப்ரெஷ் ரேட், 6.7 இன்ச் FULL HD+LTPO 2.0 AMOLED DISPLAY, 360HZ டச் சேம்பளிங் ரேட், HDR10+ ஆதரவை பெற்றுள்ளது. ஸ்க்ரீன் பாதுகாப்புக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொடுக்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் மூன்று கேமராக்கள், முறையே ப்ரைமரி கேமரா 50MP, அல்ட்ரா வைடு லென்ஸ் 8MP, மேக்ரோ லென்ஸ் 2MP என இடம்பிடித்துள்ளது. முன்புற செல்பி கேமரா 16MP கொண்டதாக உள்ளது.

விரைவாக சார்ஜிங் செய்யும் வசதி கொண்ட இந்த போனுக்கு 4800mAh இரட்டை பேட்டரியும், 150W சார்ஜிங் அடாப்டரும் கொடுக்கப்படுள்ளது.