தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Oats Breakfast: உடல் எடை குறைப்பு பயணத்தில் கைகொடுக்கும் ஓட்ஸ் முட்டை காலை உணவு.. ருசியும் அருமையாக இருக்கும்

Oats Breakfast: உடல் எடை குறைப்பு பயணத்தில் கைகொடுக்கும் ஓட்ஸ் முட்டை காலை உணவு.. ருசியும் அருமையாக இருக்கும்

Jan 24, 2024, 08:03 AM IST

google News
Oats Recipe: ஓட்ஸ் சாப்பிடுவதால் அதிக எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும், இதில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் கால் கிலோ வரை ஓட்ஸ் சாப்பிட்டால் மிகவும் நல்லது. (shahzadidevje.com)
Oats Recipe: ஓட்ஸ் சாப்பிடுவதால் அதிக எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும், இதில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் கால் கிலோ வரை ஓட்ஸ் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

Oats Recipe: ஓட்ஸ் சாப்பிடுவதால் அதிக எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும், இதில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் கால் கிலோ வரை ஓட்ஸ் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

இன்று பெரும்பாலான மக்களின் பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு. இதனால் உடல் எடையை குறைக்க பெரும்பாலானோர் காலை உணவாக ஓட்ஸை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் தினமும் ஒரே மாதிரியாக ஓட்ஸ் காலை உணவை சாப்பிட்டால், அலுத்துவிடும். 

எனவே உடலுக்கு ஆற்றலையும், நாவிற்கு சுவையையும் தரும் புதிய வகையில் ஓட்ஸ் காலை உணவை சமைக்க என்ன செய்யலாம் தெரியுமா. ஓட்ஸில் முட்டை சேர்த்து காலை உணவு செய்தால் சுவையாக இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இந்த ஓட்ஸ் காலை உணவை ஒருமுறை செய்து பாருங்கள். மிகவும் எளிமையாக குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விட முடியும்

ஓட்ஸ் முட்டை காலை உணவுக்கு தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - அரை கப்

வெங்காயம் - ஒன்று

குடைமிளகாய் - ஒன்று

மிளகாய் - இரண்டு

மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்

உப்பு - சுவைக்க

முட்டை - ஒன்று

கொத்தமல்லி தூள் - மூன்று ஸ்பூன்

எண்ணெய் - போதுமானது

தக்காளி - ஒன்று

ஓட்ஸ் முட்டை காலை உணவு செய்முறை

1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துகொள்ள வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்

2. அதில் குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க நன்றாக வதக்க வேண்டும்.

3. இவற்றை சிறிது நேரம் வதக்கி தக்காளி விழுது சேர்க்கவும்.

4. மேலே மூடி வைத்தால், தக்காளித் துண்டுகள் விரைவில் மசிந்துவிடும். குறைந்த தீயில் சமைக்க வேண்டியது முக்கியம்.

5. பிறகு மூடியை அகற்றி, தக்காளி கலவையில் மஞ்சள், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்க வேண்டும்.

6. நீங்கள் விரும்பினால் பூண்டு இஞ்சி விழுதையும் சேர்க்கலாம். இது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

7. இப்போது அதில் முட்டையை உடைத்து நன்கு கலக்க வேண்டும்.

8. நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் முட்டை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

9. அதில் அரை கப் ஊறவைத்த ஓட்ஸை சேர்க்க வேண்டும்.

10. இந்த கலவையை நன்றாக கலக்கவும்.

11. கடைசியா கொத்தமல்லி இலைகளை மேலே தூவினால் ஓட்ஸ் முட்டை காலை உணவு ரெடி.

ஓட்ஸ் சாப்பிடுவதால் அதிக எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும், இதில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் கால் கிலோ வரை ஓட்ஸ் சாப்பிட்டால் மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் அளவையும் சீராக்கி பல நோய்களைத் தடுக்கிறது. இது நம் நாட்டு உணவு அல்ல. ஆனால் இப்போது அதற்கு நம் நாட்டில் மதிப்பு அதிகம்.

ஓட்ஸ் உணவுகளை உண்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதில் கொழுப்பு இல்லை. இது இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

ஓட்ஸ் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவலாக வளர்க்கப்படுகிறது. அக்காலத்தில் இது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்பட்டது. குதிரைகளுக்கு நிறைய உணவளிக்கப்பட்டது. இப்போது மக்கள் அதன் மதிப்பை அறிந்து அதை அதிகமாக சாப்பிட ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி