தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mappillai Samba Rice Benefits: மாப்பிள்ளை சம்பா அரிசி நரம்புத் தளர்ச்சியை போக்கி காமத்தை சுகமாக்குமா? உண்மை என்ன?

Mappillai Samba Rice Benefits: மாப்பிள்ளை சம்பா அரிசி நரம்புத் தளர்ச்சியை போக்கி காமத்தை சுகமாக்குமா? உண்மை என்ன?

Kathiravan V HT Tamil

Aug 29, 2024, 04:33 PM IST

google News
Mappillai Samba Rice Benefits: கல்யாண மாப்பிள்ளை ஆக உடல் உறுதி முக்கியம் என்பதால் உடலை தங்களது உடலை பலப்படுத்த சம்பா ரக அரிசியை சாப்பிட்டு வந்தனர். இதனால் இந்த ரக சம்பா அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வந்தது.
Mappillai Samba Rice Benefits: கல்யாண மாப்பிள்ளை ஆக உடல் உறுதி முக்கியம் என்பதால் உடலை தங்களது உடலை பலப்படுத்த சம்பா ரக அரிசியை சாப்பிட்டு வந்தனர். இதனால் இந்த ரக சம்பா அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வந்தது.

Mappillai Samba Rice Benefits: கல்யாண மாப்பிள்ளை ஆக உடல் உறுதி முக்கியம் என்பதால் உடலை தங்களது உடலை பலப்படுத்த சம்பா ரக அரிசியை சாப்பிட்டு வந்தனர். இதனால் இந்த ரக சம்பா அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வந்தது.

மாப்பிள்ளை சம்பா அரிசி நரம்புத்தளர்ச்சியை போக்குமா?

மாப்பிள்ளை சம்பா பெயர் காரணம்

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான மாப்பிள்ளை சம்பா அரிசி தனது தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களுக்காக பரவலாக அறியப்படுகிறது. இளவட்டக் கல்லை தூக்கி போடும் இளைஞர்களுக்கே திருமணத்திற்கு பெண் கொடுக்கும் நிலை அந்த காலத்தில் இருந்தது.

எனவே கல்யாண மாப்பிள்ளை ஆக உடல் உறுதி முக்கியம் என்பதால் உடலை தங்களது உடலை பலப்படுத்த சம்பா ரக அரிசியை சாப்பிட்டு வந்தனர். இதனால் இந்த ரக சம்பா அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வந்தது. 

இந்த சம்பா அரிசியில் செய்யப்பட்ட பலகாரங்களை திருமணம் ஆன மாப்பிள்ளைகளுக்கு வழங்கும் பழக்கம் கிராம புறங்களில் இருந்து வருகின்றது.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள சத்துக்கள்

155 நாட்கள் முதல் 160 நாட்கள் வரை வளரக்கூடிய மாப்பிள்ளை சம்பா ரக அரிசி ஆனது சம்பா பருவத்திலும், பின் சம்பா பருவத்திலும் பயிரிடப்படுவது வழக்கமாக உள்ளது.  

100 கிராம் சமைக்காத மாப்பிள்ளை சம்பா அரிசியில் 350 கலோரிகள் நிறந்து உள்ளன. 74 முதல் 75 கிராம் மாவுச்சத்துக்கள் உள்ளது. 6 முதல் 7 கிராம் வரையிலான புரதமும், 3 முதல் 4 கிராம் வரையிலான நார்ச்சத்துக்களும் உள்ளன. 

இதுவே சமைக்காத பொன்னி அரிசியில் 360 கலோரி உள்ளது. 78 கிராம் மாவுச்சத்தும், 6 முதல் 7 கிராம்கள் வரையிலான புரதமும், 0.5 கிராமிற்கு குறைவான நார்ச்சத்துக்களும் உள்ளன. 

100 கிராம் பொன்னி அரிசியில் ஒரு மில்லி கிராமிற்கும் குறைவான இரும்பு சத்துக்களே உள்ளன. ஆனால் 100 கிராம் மாப்பிள்ளை சம்பா அரிசியில் 3 மில்லி கிராம் அளவுக்கு இரும்பு சத்து உள்ளது. 

இதுமட்டுமின்றி மெக்னீஷியம், மங்கிசு, ஜிங்க் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் நாம் வழக்கமாக சாப்பிடும் வெள்ளை பொன்னி அரிசியை விட மாப்பிள்ளை சம்பா அரிசியில் அதிகம் உள்ளது. 

நாம் வழக்கமாக உண்ணும் அரிசியில் மேற்புற பகுதிகள் நீக்கப்படுகின்றன. இதனால் இதில் உள்ள பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான தையமின் எனப்படும் முக்கிய வைட்டமின்கள் இழக்க வேண்டிய நிலை உள்ளது. 

ஆனால் மாப்பிள்ளை சம்பாவில் இது போன்ற வைட்டமின்கள் முழுமையாக கிடைக்கும்.

நரம்புத்தளர்ச்சியை போக்குமா?

மாப்பிள்ளை சம்பா போன்ற முழுதானியங்களில் தையமின் உள்ளிட்ட வைட்டமின்கள் உள்ளதால் நரம்புத் தளர்ச்சி குறையை சரி செய்யும் உணவாக உள்ளது.  

தையமின் பற்றாக்குறை ஏற்படும் போது ஒரு வகையிலான நரம்புபாதிப்புகள் ஏற்படும். மாப்பிள்ளை சம்பா போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நரம்புசார்ந்த பிரச்னைகள் வராது. 

இரும்புச்சத்து நிறைந்து உள்ளதா?

100 கிராம் மாப்பிள்ளை சம்பா அரிசியில் 3 மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது. ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 15 மில்லி கிராம் இரும்பு சத்துக்கள் தேவை எனும் போது இரண்டு வேளை மாப்பிள்ளை சம்பா உணவை சாப்பிடும் போது அதிலேயே 6 மில்லி கிராம் இரும்பு சத்துக்கள் கிடைத்துவிடும். மாப்பிள்ளை சம்பா அரிசியில் பைபர் அதிகம் உள்ளது. இதன் கிளைசினிக் இண்டெக்ஸ் 65ஆக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 

பொறுப்பு துறப்பு

இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. மருத்துவ நிலை குறித்த ஏதேனும் கேள்விகளுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை