Neem Flower Recipe: மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் பூ துவையல் செய்முறை இதோ!
Oct 27, 2023, 07:00 AM IST
தமிழ் மக்களின் பண்பாட்டோடும் பாரம்பரியத்தோடும் இணைந்தது வேப்பம்பூ வேப்ப மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் மருத்துவகுணம் நிறைந்தது.
தமிழ் மக்களின் பண்பாட்டோடும் பாரம்பரியத்தோடும் இணைந்தது வேப்பம்பூ வேப்ப மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் மருத்துவகுணம் நிறைந்தது. இந்த வேப்பம்பூவில் துவையல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேப்பம் பூ
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
மிளகாய் வத்தல்
பெருங்காயம்
எண்ணெய்
தேங்காய்
செய்முறை
இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பருப்பு நன்றாக சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அதில் 6 மிளகாய் வத்தலை சேர்த்து வறுக்க வேண்டும்.
இந்த பொருட்களை நன்றாக ஆற விட வேண்டும்.
அதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். அதில் 4 கைபிடி அளவு வேம்பம் பூவை சேர்த்து வதக்க வேண்டும். வேப்பம் பூ சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பெருங்காய தூளை சேர்த்து கலந்து விட வேண்டும்.
வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறும் வரை காத்திருக்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் அரை ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டு கொத்து கறிப்பிலையை சேர்த்து தாளிக்க விட வேண்டும்.
அவ்வளவு தான் ருசியான வேப்பம் பூ துவையல் ரெடி. இந்த வேப்பம் பூ துவையலில் தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேத்து சட்னியாக கலந்து தாளித்து கொள்ளலாம். இந்த வேப்பம் பூ சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது.
வேப்பம்பூவில் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகமாக உள்ளது.
இந்த வேப்பம்பூ துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
வேப்பம் பூவின் நன்மைகள்
வேப்பம்பூ உடலை சீராக வைக்க பெரிய அளவில் உதவி புரிகிறது. வாய்வு தொல்லை, புளிச்ச ஏப்பம், பசியின்மை ஆகியவைக்கு வேப்பம்பூ நல்ல தீர்வாகும். அதன் நறுமணம் தலை வலியை குறைக்கும். சுவாச புத்துணர்ச்சிக்கு பெரிதும் உதவும் .
நம் உடலில் பித்ததை குறைக்கும். குடல் புண்களை குணப்படுத்துவதோடு சளியையும் கட்டுப்படுத்த உதவும்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கண் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். செரிமானத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலை படுத்த உதவும். இப்படி ஏராளமான பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதன் நன்மை அறிந்தே அதை தென்னிந்திய உணவுகளில் நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். நம்மால் இயன்ற அளவு வேப்பம்பூவை குறைந்தது 10 நாட்களுக்கு ஒரு முறையேனும் எடுத்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
----------
டாபிக்ஸ்